MK Stalin: "இது சூப்பர் ஃபாஸ்ட் திமுக... பாஜகவின் டப்பா என்ஜின் முன் பணியாது..." திருப்பத்தூரில் கர்ஜித்த முதல்வர் ஸ்டாலின்
திருப்பத்தூரில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “பாஜகவின் டப்பா என்ஜின் முன் சூப்பர் பாஸ்ட் திமுக தலைகுனியாது, டப்பா என்ஜினில் ஏறி புறவாசல் வழியாக வரும் பாஜகாவை மக்கள் புறந்தள்ள வேண்டும்” என்றார்.

பாஜகவின் டப்பா என்ஜின் முன் சூப்பர் பாஸ்ட் திமுப தலைகுனியாது என்றும் டப்பா என்ஜினில் ஏறி புறவாசல் வழியாக வரும் பாஜகாவை புறந்தள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் ஆளும் திமுக கட்சியானது ஆட்சியை தக்கவைக்க பலவேறு அரசியல் வியூகங்கள் மற்றும் நகர்வுகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் இன்று (14) திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடிகுழு மாநாடு நடைப்பெற்றது.இதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
திருப்பத்தூரில் இரட்டிப்பு உற்சாகம்:
விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திருப்பத்தூரில் மக்கள் அளித்த உற்சாகம், இரட்டிப்பாகிறது, நாடாளுமன்ற தேர்தலை விட இப்போது அதிக திட்டத்தையும், கோரிக்கையும் நிறைவேற்றியுள்ளோம், 2019 பிறகு வெற்றி மேல் வெற்றி, சதிகளை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம், இந்தியாவில் எந்த டிரென்ட் இருந்தாலும், தமிழகத்தின் டிரென்ட் பிளாக் ஆன் ரெட் தான், திராவிட மாடல் 2.0 ஆட்சி ஸ்டார்ட் ஆகும் என்றார்
200 தொகுதிகள் டார்கெட்
அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசும் அளவிற்கு, 2026 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி இருக்க வேண்டும், ஒவ்வொரு பூத்திலும் 350 வாக்குகள் டார்க்கெட், 2 கோடி 30 லட்சம் மேல் வாக்குகள் வாங்க வேண்டும், அது உங்களின் பொறுப்பு. உங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வது என் பொறுப்பு, 200 தொகுதிகளில் வெற்றி பெற ஓய்வை மறந்து உழைக்க வேண்டும், சமூக வலைத்தளங்கள் வந்தாலும், மக்களிடம் நேரில் சென்று பிரச்சாரத்தின் கடைசி நிமிடம் வரை வாக்கு கேட்க வேண்டும், நமக்கு ஆதரவு கூடியிருக்கிறது,
பச்சை துண்டு போட்ட பச்சை துரோகம்
பாஜகவின் கிளைகழக அதிமுக செயலாளர் செயலாளர் தான் பழனிச்சாமி, தமிழ்நாட்டு மக்களுக்காக பேச தெரியாமல், முதுகெலும்பு இல்லாமல், கொத்தடிமை செய்யும் பழனிச்சாமி, அரசியல் தெரியாமல், சோசியல் மீடியாவில் பேசி வருகிறார்.
மாண்புமிகு தவழ்ந்து வரும் பழனிச்சாமி சட்ட ஒழுங்கு பேச தார்மீக உரிமை இருக்கிறதா, பொல்லாத ஆட்சி, பொள்ளாட்சி சாட்சி அது ஆறாத வடு, உழவர்களுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்து, பச்சை துண்டு, போட்டு பச்சை துரோகம் செய்தவரை, மக்கள் மன்னிகமாட்டார்கள், இஸ்லாமியர்களும் மன்னிக்கமாட்டார்கள்,
சூப்பர் பாஸ்ட் திமுக
திமுக மீதான அவதூறு பேச்சை மக்கள் நம்பமாட்டார்கள், ஆயிரம் ஆண்டுகள் நின்று பேசும் சாதனையை 5 ஆண்டுகளில் செய்துள்ளோம், வட மாநிலங்கள் திமுக அரசை உதராணமாக கூறி பாராட்டி வருகின்றனர்,
பாஜகவின் டப்பா என்ஜின் முன் சூப்பர் பாஸ்ட் திமுக தலைகுனியாது, டப்பா என்ஜினில் ஏறி புறவாசல் வழியாக வரும் பாஜகாவை மக்கள் புறந்தள்ள வேண்டும் என்றார். மோடி தோப்புகரதணம் போட வேண்டும் என்று கூறினால் நிறுத்த சொல்லும் வரை பல்டி அடிப்பவர் பழனிச்சாமி, அதிமுக பாஜகவை யூஸ் செய்கிறது, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும், தமிழ்நாட்டு போரில், தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா, தமிழ்நாட்டை காக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.
























