மேலும் அறிய

MK Stalin: உண்மையான ரிப்போர்ட்தான் எனக்கு வேணும்.. ஜுன் இறுதிக்குள் ஆக்ஷன்! நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் காட்டம்

திமுக தோல்விக்கான ஆய்வு அறிக்கையில் உண்மையான அறிக்கையை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் திராவிட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்ற நிலையில், முதல் தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தோல்வி அடைந்த மு.க.ஸ்டாலின்:

முதலமைச்சராக பதவிவகித்த மு.க.ஸ்டாலின் அவரது கொளத்தூர் தொகுதியிலே சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவரது தோல்வி திமுக-வினர் மத்தியில் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர், இதுதொடர்பாக 36 பேர் கொண்ட குழுவினரை திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சூழலில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.

இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.

உண்மையை மட்டும் சொல்லுங்கள்:

• நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.

• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.

காப்பாற்ற முயற்சி வேண்டாம்:

• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. 

• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.

• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.

என்மேல் குறை சொன்னாலும் பரவாயில்லை:

• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.

• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.

• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.

யாரிடமும் பகிரக்கூடாது:

• நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.

• கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.

• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.

• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.

• நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.

ஜுன்-க்குள் இறுதி முடிவு:

• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.

• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.

• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: டெல்லியை அதிர வைத்த திமுக; இந்தியா கூட்டணி கூட்டம் புறக்கணிப்பு - இதற்கு இந்த கட்சி காரணமா?
டெல்லியை அதிர வைத்த திமுக; இந்தியா கூட்டணி கூட்டம் புறக்கணிப்பு - இதற்கு இந்த கட்சி காரணமா?
Priya vs Pallavi: பிரியா வர்றது பிளான்லயே இல்ல; அவமானப்படுத்ததான் ஸ்கூலுக்கு வந்தாங்க; பல்லவி பரபரப்பு பேட்டி
Priya vs Pallavi: பிரியா வர்றது பிளான்லயே இல்ல; அவமானப்படுத்ததான் ஸ்கூலுக்கு வந்தாங்க; பல்லவி பரபரப்பு பேட்டி
அடுத்த 24 மணி நேரம் உஷார் - தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை - சென்னையின் நிலவரம் என்ன?
அடுத்த 24 மணி நேரம் உஷார் - தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை - சென்னையின் நிலவரம் என்ன?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Netflix Free Subscription: ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Embed widget