மேலும் அறிய

CM Vijay: நடிகர் விஜய்யா? - மு.க.ஸ்டாலின், உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை.. விளாசும் நெட்டிசன்கள்!

விஜய் முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் முழுக்க அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து பலரும் பதிவிட்டனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதியும் தெரிவித்த வாழ்த்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றிற்கும் ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவுகள் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவளிக்க முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பதவிப்பிரமாணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விஜயுடன் சேர்த்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 

விஜய் முதலமைச்சராக பதவியேற்றதை தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் மூலம் தவெக தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் முழுக்க அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து பலரும் பதிவிட்டனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

நடிகர் விஜய் அக்கவுண்டை குறிப்பிட்டு பதிவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். 

அதேபோல தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கும் என் வாழ்த்துகள் என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

ஆனால் இந்த இரு பதிவுகளிலும் நடிகர் விஜய்யின் சமூக வலைத்தளக் கணக்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய்க்கு தனியாக @TVKVijayHQ என்ற பெயரில் சமூக வலைத்தளக் கணக்கு உள்ளது. அதேசமயம் முதலமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு @CMOTamilnadu என்ற கணக்கும் பராமரிக்கப்படும். இப்படியான நிலையில் இரண்டையும் குறிப்பிடாமல் நடிகர் விஜயை அக்கவுண்டை மட்டும் குறிப்பிட்டுள்ளதற்கு தவெக தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

தவறான முன்னுதாரணமாக அமையும்

பொதுவாக அரசியல் தலைவர்களின் சமூக வலைத்தளக் கணக்குகளை பராமரிக்க ஒரு குழு செயல்படும். சில நேரங்களில் அதில் தவறுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் அது நிகழ்ந்துள்ளது. ஆனால் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் துணை முதலமைச்சர் கணக்கில் இருந்து, தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு இப்படி ஒரு பதிவை போட்டிருப்பது அவர்கள் கவனத்திற்கு வராமல் போயிருக்குமா என்ற கேள்விகளை தவெகவினரும், இணையவாசிகளும் எழுப்பியுள்ளனர்.  வரும் காலங்களில் தவறாக முன்னுதாரணமாக அமையும் என்பதால் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என பலரும் வேண்டுகோளும் விடுத்துள்ளனர். விரைவில் இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

திமுகவில் கொங்கு தளபதிகளாக தங்கமணி, வேலுமணி.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- இபிஎஸ் ஷாக்
திமுகவில் கொங்கு தளபதிகளாக தங்கமணி, வேலுமணி.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- இபிஎஸ் ஷாக்
Thanjavur Airport: ரூ.100 கோடி மதிப்பீடு.. தஞ்சாவூரில் விமான நிலையம் எப்போது?.. வெளியான முக்கிய தகவல்!
Thanjavur Airport: ரூ.100 கோடி மதிப்பீடு.. தஞ்சாவூரில் விமான நிலையம் எப்போது?.. வெளியான முக்கிய தகவல்!
Amma Unavagam: அம்மா உணவகத்தில் அழுகிப்போன காய்கறிகள்.. ஆய்வுக்கு சென்ற தவெக MLA அதிர்ச்சி!
Amma Unavagam: அம்மா உணவகத்தில் அழுகிப்போன காய்கறிகள்.. ஆய்வுக்கு சென்ற தவெக MLA அதிர்ச்சி!
பெண் காவலர் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிங்கப்பெண் படை இருந்தும் இப்படியா? - விஜயை விளாசிய வானதி!
பெண் காவலர் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிங்கப்பெண் படை இருந்தும் இப்படியா? - விஜயை விளாசிய வானதி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK Thirumavalavan: ”விஜயின் அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் விலகுவோம்” விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி
”விஜயின் அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் விலகுவோம்” விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி
US Iran War: எல்லாம் முடிஞ்ச்..! ஒரு ரூபாய் கொடுக்காம போர் ஓவர், ஈரான் உடன் இன்று அமைதி ஒப்பந்தம் - ட்ரம்ப்
எல்லாம் முடிஞ்ச்..! ஒரு ரூபாய் கொடுக்காம போர் ஓவர், ஈரான் உடன் இன்று அமைதி ஒப்பந்தம் - ட்ரம்ப்
பெண் காவலர் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிங்கப்பெண் படை இருந்தும் இப்படியா? - விஜயை விளாசிய வானதி!
பெண் காவலர் கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிங்கப்பெண் படை இருந்தும் இப்படியா? - விஜயை விளாசிய வானதி!
TN Weather Update: சண்டே சம்பவம்..! 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம்
சண்டே சம்பவம்..! 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம்
Skoda Kodiaq RS: இந்தியாவிற்கான ஸ்கோடாவின் வேகமான SUV ஆன் தி வே - ஜுன்.22 புக்கிங் - விலை, ரைவல்ஸ்
இந்தியாவிற்கான ஸ்கோடாவின் வேகமான SUV ஆன் தி வே - ஜுன்.22 புக்கிங் - விலை, ரைவல்ஸ்
திமுகவில் கொங்கு தளபதிகளாக தங்கமணி, வேலுமணி.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- இபிஎஸ் ஷாக்
திமுகவில் கொங்கு தளபதிகளாக தங்கமணி, வேலுமணி.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- இபிஎஸ் ஷாக்
TVK Vijay: வன்மத்தில் வடை சுடும் ஸ்டாலின்.. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்த குடும்பம்.. தவெக சரமாரி விமர்சனம்!
TVK Vijay: வன்மத்தில் வடை சுடும் ஸ்டாலின்.. தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்த குடும்பம்.. தவெக சரமாரி விமர்சனம்!
ஆவின் பச்சை பால் ரத்தா.. யாரை ஏமாற்றுகிறது தவெக அரசு? அண்ணாமலை சரமாரிக் கேள்வி
ஆவின் பச்சை பால் ரத்தா.. யாரை ஏமாற்றுகிறது தவெக அரசு? அண்ணாமலை சரமாரிக் கேள்வி
Embed widget