பொறியியில் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். இதையடுத்து, தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 13ம் தேதி தொடங்குகிறது. 

Continues below advertisement

அமைச்சர் கோட்டா:

உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பிறகு அளித்த பேட்டியில், கடந்த காலங்களில் ஒவ்வொரு கல்லூரியிலும் கணிசமான இடங்களை அமைச்சருக்கு கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டனர். அதன் மூலமாக மிகப்பெரிய வசூல் வேட்டை நடந்துள்ளது என்று கூறினார்.

வசூல் வேட்டை:

இதன்மூலம், கடந்த திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறையில் மிகப்பெரிய அளவில் லஞ்ச வேட்டை நடந்ததை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளிடம் தடையில்லா சான்றிதழ், பள்ளி உரிமம் புதுப்பிப்பிற்கு கட்சி நிதி என்ற பெயரில் பல லட்சம் வாங்கியதாக தனியார் பள்ளிகள் சங்கம் குற்றம் சாட்டியிருந்தனர். 

Continues below advertisement

இந்த சூழலில், திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறையில் அமைச்சர் கோட்டா என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மட்டும் இது நடந்ததா? அல்லது அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும் இது நடந்ததா? என்ற கேள்வியும் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

நடவடிக்கை எடுக்கப்படுமா?

உயர்கல்வித்துறை அமைச்சரே கடந்த காலங்களில் அமைச்சர் கோட்டா என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர்களாக 2021 முதல் 2024 வரை பொன்முடியும், 2024 முதல் ஆட்சி முடியும் வரை கோவி செழியனும் பொறுப்பு வகித்தனர். 

அமைச்சரின் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த காலத்தில் உயர்கல்வித்துறைக்கு பொறுப்பு வகித்த அவர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுமா? எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு? என்று தவெக அரசு விசாரணையில் கொண்டு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக-விற்கு புது நெருக்கடி:

கடந்த கால திமுக அரசு மீது பல்வேறு தரப்பினரும் ஊழல், லஞ்ச குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் சூழலில், தற்போது உயர்கல்வித்துறையில் கடந்த காலத்தில் அமைச்சர் கோட்டா என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தியதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் குற்றம் சாட்டியிருப்பது திமுக-விற்கு புதிய நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.