Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு

Deputy Chief Minister Udhayanidhi Stalin?: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு

Continues below advertisement

Deputy Chief Minister Udhayanidhi Stalin?: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக  விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தகவல், கடந்த சில மாதங்களாகவே நிலவி வந்தது. இதற்கான கோப்புகள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளதாகவும் எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்பட்டது. 

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் வருமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ தி.மு.க. சொன்னதைத்தான் செய்வோம். சொல்வதைத்தான் செய்வோம். நிச்சயமாக, உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்” என்று கூறி இருந்தார். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ளார் என்றும், அதற்கு ஆளுநர் தரப்பில்  ஒப்புதல் அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவையில் மாற்றம்: 

இந்நிலையில், தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் , இன்று துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். 

இதையடுத்து புதிய அமைச்சரவையில் மனோ தங்கராஜ். செஞ்சி மஸ்தான், K ராமசந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அமைச்சரவையில் மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி.

இதை தொடர்ந்து ஆவடி நாசர்,கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்

இதையடுத்து திமுக தொண்டர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.


Continues below advertisement