மேலும் அறிய

Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?

அமைச்சர் ஸ்ரீநாத், ஏற்கனவே கச்சத்தீவு குறித்த கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்‘ என கூறி சர்ச்சையில் சிக்கிய நிலையில், மீண்டும் ஒரு சம்பவத்தில் சிக்கியுள்ளார். தொகுதி மாறிப் போய் அவர் செய்தது என்ன.? பார்க்கலாம்.

முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், சமீபத்தி அவர் சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வரிசையில், மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். அது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஸ்ரீநாத்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற தனது ஆருயிர் நண்பரான ஸ்ரீநாத்தை, மீன்வளத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளார் விஜய். இந்த நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார் ஆகியோர், திருவான்மியூர் குப்பம் பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மீனவ மக்களின் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மீனவ மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் அமைச்சர் ஸ்ரீநாத் கேட்டறிந்தார். இந்நிலையில், அவரது அதிரடி ஆய்வுகள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில், திருவான்மியூர் பகுதியில் உள்ள மீனவ மக்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் ஸ்ரீநாத்திடம், ‘கச்சத்தீவு மீட்பு’ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பலமுறை ‘நோ கமெண்ட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தமிழ்நாடு மீனவர்களின் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படும் ‘கச்சத்தீவு’ பிரச்னை தொடர்பான கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கூறிய பதில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.

தொகுதி மாறி நன்றி தெரிவித்து மீண்டும் சர்ச்சை

இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் சர்ச்சையில் சிக்கி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் அமைச்சர் ஸ்ரீநாத். தன்னை வெற்றிபெற வைத்த தொகுதி மக்களக்கு நன்றி தெரிவிக்க நினைத்த அவர், நன்றி தெரிவித்ததென்னவோ பக்கத்து தொகுதி மக்களுக்குத் தான். 

ஆம், தான் வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிதானா என்று தெரியாமல், திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட புன்னைக்காயல் மீனவ மக்களுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் நன்றி தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்ரீநாத், திமுக வெற்றி பெற்ற தொகுதியில் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி நடத்திய அவர், எங்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்த உங்கள் ஊர் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் என பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத்தை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை! வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவது எப்படி?
மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை! வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவது எப்படி?
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Tiruppur Power Shutdown: திருப்பூரில் நாளை(04-06-26) மின் தடை! உங்கள் ஏரியா இருக்கா? செக் பண்ணுங்க
Tiruppur Power Shutdown: திருப்பூரில் நாளை(04-06-26) மின் தடை! உங்கள் ஏரியா இருக்கா? செக் பண்ணுங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Best Mileage CNG Cars: பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
Embed widget