அமைச்சர் செந்தில்பாலாஜி பார் டென்டரில் முறைகேடு செய்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. டாஸ்மாக் பார் டெண்டர் முறைகேட்டில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடு உள்ளதாக தமிழ்நாடு டாஸ்மார்க் உரிமையாளர்கள் சங்கம்  புகார் கூறியுள்ளனர்.


சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் டாஸ்மாக் குடோன் இயங்கி வருகிறது.
இங்கு பார் உரிமம் புதுப்பித்தல், புதிதாக பார் எடுப்பதற்கான டெண்டர் விடப்படுவது வழக்கம். இந்நிலையில் டெண்டர் விடுவதற்கான விண்ணப்பம்  2 ஆம்தேதி ஆன்லைனில் எடுத்துக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைனில் இதுவரை விண்ணப்ப படிவம் ஏதும் வரவில்லை என்பதால் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மார்க் சங்க உரிமையாளர்கள் செம்பரம்பாக்கத்தில் உள்ள டாஸ்மார்க் குடோனுக்கு வந்து அதிகாரியிடம் விண்ணப்ப படிவம் குறித்து கேட்டபோது, அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்து உள்ளனர். மேலும் டென்டர் விண்ணப்பம் பெறுவதற்கு நீங்கள் துறை சார்ந்த அமைச்சரை சென்று பார்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இது குறித்து பார் உரிமையாளர் சங்க தலைவர் அன்பரசு கூறியதாவது: தொடர்ந்து டாஸ்மார்க் பார் டென்டரில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும், தற்போது விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கு கூட துறை சார்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்கும்படி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பார் டென்டர் எடுப்பதில் அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்குகின்றனர்.


மேலும் பார் டென்டர் எடுப்பதில் ஒரு தலை பட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து இதேபோல் அமைச்சரின் தலையீடு தொடர்ந்தால் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.


 




திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக திகழ்வது இந்த கோவிலாகும். இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மலை மேல் உள்ள கோவில் மண்டபங்களில் திருமணம், காதுக்குத்து, திருமண நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.


இந்த நிலையில் ஆவடி அடுத்த கன்னடபாளையம் கிராமத்தை சேர்ந்த  முனியப்பன். இவரது மனைவி லட்சுமி வ/40. இவர்கள் தங்கள் குடும்பத்துடன் திருத்தணி முருகன் மலைகோவிலில் உள்ள RCC மண்டபத்தில் நடைப்பெறும்  காதுக்குத்து நிகழ்ச்சியில் உறவினர்களுடன் பங்கேற்றுள்ளனர்.


அப்போது அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்த பொழுது திடீரென மண்டபத்தில் சுழன்று கொண்டிருந்த மின்விசிறி கழன்றி லட்சுமியின் தலைமீது விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமி மயக்கம் அடைந்துள்ளார். உறவினர்கள் லட்சுமியை மீட்டு மலைக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள   மருத்துவ மனையில் முதலுதவிக்கு அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து லட்சுமியின் உறவினர்கள் தெரிவித்ததாவது: கோவிலில் உள்ள மின்சாதன பொருட்களை முறையாக பராமரிக்கப்படுவதில்லை, கோவில் நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர். பின் பக்தர் மீது மின்விசிறி கழண்டு விழுந்த இச்சம்பவத்தால் முருகன் மலைக்கோவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண