செந்தில்பாலாஜி மீது நியாயமான விசாரணை நடக்க வேண்டுமெனில் அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும். இல்லையெனில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவோம் என முன்னாள் அமைச்சர் சின்னசாமி கரூரில் பேட்டியளித்தார்.




கடந்த 2014-ம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்ததாக, அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.


அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாது. வழக்கை தொடர்ந்து நடத்தவேண்டும் என்று ஓரிரு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மீண்டும் விசாரணையை அமலாக்கத்துறை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம் தொடர்பாக, கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கரூர் சின்னசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.




அப்போது பேசிய அவர், “திமுக அரசில் பவர்ஃபுல் அதிகாரமிக்க அமைச்சராக வலம்வரும் செந்தில்பாலாஜி மீது வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அமைச்சரவையில் செந்தில்பாலாஜி நீடித்தால் நியாயமான விசாரணை எப்படி நடக்காது. அவர் பதவி விலக வேண்டும். செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது. ஆனால், செந்தில்பாலாஜியால் தனது பதவிக்கு ஆபத்து வரும் என்பதால் முதல்வர் அவரது அமைச்சர் பதவியை ரத்து செய்ய மாட்டார்.  செந்தில்பாலாஜி பதவி விலக வில்லையெனில், அதிமுக தலைமையிடம் பேசி போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்தார். த்


தொடர்ந்து பேசிய அவர், செந்தில்பாலாஜி தன்னை காப்பாற்றி கொள்ள டெல்லி சென்று பாஜகவில் கூட இணைய வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் அண்ணாமலையை பின்தள்ளி வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக செந்தில் பாலாஜி தன்னை அறிவிக்கும்படி கேட்பார் எனவும், ஓ.பன்னீர்செல்வம் தற்போது 2000 ரூபாய் செல்லாத நோட்டு போல் உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இரட்டை இலை செய்தியாளர்கள் எழுதிய கேள்விக்கு நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது அதில் பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பினார்.




கரூர் 80 அடி சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி உடன் மாவட்ட அவைத்தலைவர் திரு வி கா மாவட்ட பொருளாளர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண