கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அலுவலகமான அபெக்ஸ் இம்பெக்ஸ் அலுவலகத்துக்கு சீல் வைத்து அமலாக்கத்துறை நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.
காலை 8 மணி முதல் கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். 12 மணி நேர அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரது அலுவலகமான அபெக்ஸ் இம்பெக்ஸ் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். அமலாக்கத்துறை அனுமதி இன்றி அலுவலகத்தை திறக்க கூடாது எனவும், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தேசாரியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்