எதிர்க்கட்சித் தலைவர் வஞ்சக எண்ணத்தோடு குறை சொல்லி வருகிறார் என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். 


அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர். 12 மணி நேரத்தில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது. 


புயல் மழை என்றவுடன் முதலமைச்சர் உடனடியாக களத்துக்கு சென்று ஆய்வு செய்தார். குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் சேறு வீசியுள்ளனர். 


எதிர்கட்சி தலைவர் ஆளுங்கட்சிக்கு ஆலோசனை சொல்லா விட்டாலும் , ஆலோசனை சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மு.க ஸ்டாலின் தயாராக இருக்கிறார்.


சேலத்துக்கும் சென்னைக்கும் மட்டுமே எதிர் கட்சி தலைவர் அரசியல் செய்கிறார். வஞ்சக என்னத்தோடு மட்டுமே குறை சொல்லி வருகிறார்.


விழுப்புரம் மாவட்டத்தில் , உள் நோக்கத்தோடு , குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த நபர் சேற்றை வாரி இறைத்து இருக்கிறார்கள். இப்படி பட்ட தடைகளை தாண்டி வளர்ந்தது தான் திமுக. 


 



பழுதான வாகனங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலினை செய்து வருகிறோம்.  சாத்தனூர் அணை திறப்பதற்கு முன்பாக 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை  தெரிவிக்கப்பட்டது.


பாதிப்படைந்த வீடுகள், கால்நடைகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் குறித்து இந்திய வானிலை மையத்தாலே அளவிட முடியவில்லை. ஏற்கனவே தயார் நிலையில் இருந்ததால் தான் பெரிய அளவுகளில் உயிரிழப்புகள் இல்லை. தீப ஔி திருநாள் கூடப்படும் கூட்டத்திற்கு கூடும் வசதிகள் 2 மடங்காக அதிகப்படுத்தப்படும்.


கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை முதலமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தை காக்கின்ற கடவுளாக முதலமைச்சர் காட்சியளித்துக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகள் அவதூறுகளை பரப்பிக்கொண்டிருக்கின்றன. இபிஎஸ் கடந்த காலங்களை திரும்பி பார்க்க வேண்டும். 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இன்றி திறந்ததால் 280க்கும் மேற்பட்ட உயிர்கள் இறந்ததை அவர் மறந்திருக்க மாட்டார். பல லட்சம் வீடுகள் இழந்ததை அவர் மறந்திருக்க மாட்டார்.


சாத்தனூர் அணையில் முன்னறிவிப்பு கொடுத்துதான் தண்ணீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதனால்தான் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. மனசாட்சி இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு நன்றி கூறியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தமிழக அரசை குறைகூறி கொண்டிருக்கிறார். வாய்சவடால் விடுகின்ற எதிர்க்கட்சித் தலைவர் மத்திய அரசிடம் தமிழக அரசு வேண்டுகிற நிதியை தர அழுத்தம் தரவேண்டுமே தவிர தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்க கூடாது” எனத் தெரிவித்தார்.