தமிழக கோயில்களில் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்ய அமைச்சர் ரமேஷ் அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Continues below advertisement

அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆய்வு

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து துறை அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று தங்கள் துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் நடவடிக்கைகள் அடுத்தடுத்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இந்த துறையின் அமைச்சராக சேகர்பாபு செயல்பட்டார். அப்போது தமிழ்நாடு முழுக்க கோயில்களில் பல்வேறு விதமான முறைகேடுகள் தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில் எவ்வித நடவடிக்கையும் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். குறிப்பாக கோயிலுக்கு சென்று நிம்மதியாக சாமி தரிசனம் கூட செய்ய முடியவில்லை என நொந்து கொண்டனர். 

இப்படியான நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதவியேற்றதும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று ரகசிய ஆய்வு மேற்கொண்டார். அங்கு அமைச்சர் என தெரியாமல் அவரிடமே விரைவு தரிசனம் செய்ய பணம் கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து திருவனைக்காவல் கோயில் சென்று அங்கு பிரசாத உணவுகள் விற்கும் கையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு விற்கப்படும் உணவுகளின் தயாரிப்பு தேதி தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகள் கடுமையான கிண்டலுக்குள்ளானது. 

Continues below advertisement