பழநி அடிவாரத்தில் 100 கோடி சொத்து பதிவு

பழநி அடிவாரத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தை அமைச்சர் ரமேஷ் உறவினர்கள் வாங்கியதாக தகவல் வெளியானது. மேலும் அமைச்சர் ரமேஷ்க்கும் இதில் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தை சில தனியார் நபர்கள் சட்ட விரோதமாக பதிவு செய்ததை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துறை ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் காவல் துறை விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

Continues below advertisement

அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை

நிலம் தொடர்பான சில வழக்குகள் இருப்பதை மேற்கோள் காட்டி, இந்த நிலத்தை யார் பதிய சொல்லி கேட்டாலும் அதனை செய்யக் கூடாது என்று ஏற்கனவே பழனி இணை ஆணையர் மூலம் பலமுறை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படி அனைத்து நடவடிக்கைகளையும் சட்டத்துக்கு உட்பட்டு துரிதமாக எடுக்கப்படும் போது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அமைச்சர் ரமேஷ் அவர்களின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சில கட்சிகளை சார்ந்த சமூக வலைதள பக்கங்கள் மற்றும் சில மீடியாக்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சரின் உறவினர்கள் என்றும், அமைச்சருக்கு தெரிந்தே தான் இந்த குற்றம் நடந்தது என்றும் தனக்கு எள்ளளவும் சம்மந்தம் இல்லாத விடயத்தில் அமைச்சர் பெயரை பொய்யாக வன்மத்துடன் இணைத்து பரப்பப்படுகிறது.

Continues below advertisement

பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை

இந்த நபர்கள் மீதும், சமூக வலைதள கணக்குகள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் அமைச்சர் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. விரைவில் பொய் செய்தி பரப்பியவர்கள் மீதும், இனி பரப்புவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.