மேலும் அறிய

தமிழகத்தில் ஏன் அடிக்கடி கரண்ட் கட் ஆகுது?- அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன காரணம்

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை லோடு ட்ரிப்பிங் மற்றும் பழைய கேபிள்களே மின்தடைக்குக் காரணம் - அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

மின்தடையில் சதி இருப்பதாகவும் பின்னணியில் இருக்கும் கருப்பு ஆடுகள் மீது இன்று இரவுக்குள் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் 80 ஆவது ஆண்டு விழாவில்அமைச்சர் நிர்மல் குமார்  கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின் தட்டுப்பாடு ஏதும் தமிழகத்தில் இல்லை சில இடங்களில் லோடு குறைவாக இருக்கும்போது ஃபியூஸ் ஆஃப் ஆவதும் சில இடங்களில் லோடு அதிகமாகும்போது ட்ரிப்பிங் ஏற்படுவதும் லெகசி டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் பழைய கேபிள்களில் ஏற்படும் பழுதுகளுமே மின்தடைக்கு முக்கியக் காரணங்கள் என்று அவர் தெரிவித்தார்.

கோடைக்காலத்தின் திடீர் வெப்ப உயர்வால் மின்சாரப் பயன்பாடு உச்சத்தைத் தொட்டுள்ளது. மேலும், ரேபிட் இன்ஜினியர் டீம்  சென்னையில் மின்தடைப் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் பிரத்யேக வாகனங்களுடன் கூடிய 7 ரேபிட் இன்ஜினியரிங் குழுக்கள் அமைக்கப்பட்டு நேற்று இரவு முழுவதும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டன என அவர் தெரிவித்தார்.

தலைமைப் பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக இரவு முழுவதும் தூங்காமல் சப்-ஸ்டேஷன்களில் நேரடியாக ரோந்து மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும்  திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், கரூர் போன்ற மாவட்டங்களிலும் பழுதுகள் சரிசெய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

 

மேலும், வாரியத்தில் பணியாற்றும் 99% ஊழியர்கள் சிறப்பாகச் செயல்படும் வேளையில், ஒரு சில பேர் கருப்பு ஆடுகளாக இருந்து மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் ஒருசில தனிநபர்களின் தவறுகளாலும் யாருடைய தூண்டுதலின் பேரிலோ திட்டமிட்டு மின்சாரத் தடைகள் ஏற்படுத்தப்படுவதாகத் தகவல்கள் வந்துள்ளன அவ்வாறு தவறிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இன்று இரவுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக மின்சார வாரியம் நலிவடைந்து வந்து, தற்போது சுமார் 2.5 லட்சம் கோடி கடனில் சிக்கியுள்ளது என்றும் கடுமையான பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது மொத்தம் 1,40,000 ஊழியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது 70,000 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்  இதனைச் சமாளிக்கத் தற்காலிகமாக ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் கூடுதல் வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் மின்சார வாரியத்தின் 24 மணி நேர கால் சென்டரை தொடர்பு கொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும் அங்கு 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர் என்றும் சப்-ஸ்டேஷன்களில் உள்ள ஊழியர்கள் களப்பணிகளில் பிஸியாக இருக்கும்போது தொலைபேசியை எடுக்க முடியாமல் போகலாம் என்பதால் கால் சென்டரைத் தொடர்புகொண்டால் உடனடியாக ஆன்லைனில் டிக்கெட் ரைஸ் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார்.

சோலார்  மின் உற்பத்தியில் இதற்கு முன் சிஸ்டம்களில் நிலவிய பல முறைகேடுகள் நிறுத்தப்பட்டு, தவறிழைத்த இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முறையான ஆய்வு இல்லாமல் வழங்கப்பட்ட சுமார் 2,000 முதல் 3,000 கோடி மதிப்பிலான சோலார் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இனி முதலீட்டாளர்கள் எளிதாக அனுமதி பெறும் வகையில் புதிய வெளிப்படையான சிஸ்டம் கொண்டுவரப்படும் இது தொடர்பாக முதலீட்டாளர்கள் கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது என்றும் இரவு நேரப் பயன்பாட்டிற்கு அனல் மின் நிலையங்களின்  செயல்பாடு மிக முக்கியமானது. தற்போது 60% முதல் 65% திறனில் இயங்கும் அனல் மின் நிலைய உற்பத்தியை மேலும் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Airport : ’58 நாள் குழந்தைக்காக அவசரமாக தரையிறங்கிய விமானம்’ சென்னையில் நடந்தது என்ன..?
’58 நாள் குழந்தைக்காக அவசரமாக தரையிறங்கிய விமானம்’ நடந்தது என்ன..?
வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு.! குழந்தைகள் பாதுகாப்பை கோட்டை விட்ட முதல்வர்- இறங்கி அடிக்கும் உதயநிதி
வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு.! குழந்தைகள் பாதுகாப்பை கோட்டை விட்ட முதல்வர்- இறங்கி அடிக்கும் உதயநிதி
கும்மிடிப்பூண்டியில் குழந்தையை சீரழித்து கொன்ற கொடூரம்.. முட்புதரில் கிடந்த சடலம் - நடந்தது என்ன?
கும்மிடிப்பூண்டியில் குழந்தையை சீரழித்து கொன்ற கொடூரம்.. முட்புதரில் கிடந்த சடலம் - நடந்தது என்ன?
மதுரை மக்களே.. நாளை ஏகப்பட்ட இடத்தில் மின்தடை... (16.06.2026) இது தான் முழு லிஸ்ட் !
மதுரை மக்களே.. நாளை ஏகப்பட்ட இடத்தில் மின்தடை... (16.06.2026) இது தான் முழு லிஸ்ட் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு.! குழந்தைகள் பாதுகாப்பை கோட்டை விட்ட முதல்வர்- இறங்கி அடிக்கும் உதயநிதி
வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு.! குழந்தைகள் பாதுகாப்பை கோட்டை விட்ட முதல்வர்- இறங்கி அடிக்கும் உதயநிதி
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழப்பு.. தவெகவை சாடிய கனிமொழி!
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழப்பு.. தவெகவை சாடிய கனிமொழி!
DMK Slams Rahul Gandhi : ‘காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்’ காலையிலேயே ராகுலை திட்டித் தீர்த்த திமுக..!
‘காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்’ ராகுலை திட்டித் தீர்த்த திமுக..!
Thirumavalavan: நான் தேர்தலில் நிற்காமல் போனதற்கு திமுக தான் காரணம்.. ஒப்புக்கொண்ட திருமாவளவன்!
Thirumavalavan: நான் தேர்தலில் நிற்காமல் போனதற்கு திமுக தான் காரணம்.. ஒப்புக்கொண்ட திருமாவளவன்!
TVK Govt: ”திமுக மினிஸ்டர் ஒருத்தரும் மிஸ் ஆகக் கூடாது” சிறப்பு குழு, டெண்டர் டூ கமிஷன் - தவெக அரசு அதிரடி
”திமுக மினிஸ்டர் ஒருத்தரும் மிஸ் ஆகக் கூடாது” சிறப்பு குழு, டெண்டர் டூ கமிஷன் - தவெக அரசு அதிரடி
Tamilnadu Round Up: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, கனிமொழி கண்டனம், எகிறிய தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, கனிமொழி கண்டனம், எகிறிய தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
GK Vasan Join DMK Alliance : காங்கிரஸ் போனால் போகட்டும்.! நான் இருக்கிறேன்... ஸ்டாலினோடு கை கோர்க்கும் ஜி.கே.வாசன்.? திடீர் ட்விஸ்ட்
காங்கிரஸ் போனால் போகட்டும்.! நான் இருக்கிறேன்... ஸ்டாலினோடு கை கோர்க்கும் ஜி.கே.வாசன்.? திடீர் ட்விஸ்ட்
Gold rate today : ரூ.10,000 உயர்ந்தது.! வாரத்தின் முதல் நாளே தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக்- இன்றைய விலை நிலவரம் இதோ..
ரூ.10,000 உயர்ந்தது.! வாரத்தின் முதல் நாளே தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக்- இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget