வடகிழக்கு பருவமழை தீவிரம்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில்  "டிட்வா" புயல் உருவாகியுள்ளது. இன்று காலை 8:30 மணி நிலவரப்படி நாகைக்கு தெற்கே-தென்கிழக்கே 170 கிமீ, காரைக்கால் 180 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.  30-ஆம் தேதி அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

Continues below advertisement

புயல் பாதிப்பு-ஆட்சியர்களுக்கு உத்தரவு

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவரசகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் டெல்டா மற்றும் வடகடலோர மாவட்ட ஆட்சியர்கள் உடன் காணொளி காட்சி வாயிலாக ஆலேசானை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிட்வா புயல் பாதிப்பு மற்றும் மழை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை செய்யப்பட்டதாகவும். குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, கடலூர், விழுப்பும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டோம் என கூறினார்.

 

Continues below advertisement

பொதுமக்களுக்கு அலர்ட் எஸ்எம்எஸ்

நாகையில் இரண்டு இடங்களில் அதிக மழை பெய்து உள்ளது. இந்த புயலானது ராமநாதபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி வரும் என சொல்லி உள்ளார்கள் எனவும் சென்னைக்கு வராமல் சென்னைக்கு ஒரமாகவே இந்த புயல் செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தான் அதிக பாதிப்புகளை எற்படுத்தும் அங்கும் தொடர்ந்து அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். நேற்று வரை 1 கோடியே 24 லட்சம் பேருக்கு டிட்வா புயல் குறித்து குறுச்செய்திகள் அனுப்பபட்டுள்ளது. புயல்களை எப்படி எதிர்க்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் குறுஞ்செய்தி மூலமாக மக்களுக்கு எச்சரிக்கை அனுப்பி உள்ளோம் என தெரிவித்தார்.

புயல் எங்கே கரையை கடக்கும்

மாநில தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் என்பது 28 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 10 அணிகளை விமான குழுக்களாக கேட்டு உள்ளோம் என கூறினார். தேவை என்றால் முதல்வர் அவர்களை அழைப்பார் எனவும் தற்போது மழை பெய்து வரும் மாவட்டங்களில் அமைச்சர்கள் களத்தில் உள்ளனர் எனவும் தெரிவித்தார். இந்த டிட்வா புயலால் பெரிய அளவில் பாதிப்போ உயிரிழப்புகளோ எதுவும் இல்லை, தற்போதை வரை 16 கால்நடைகள் இறந்துள்ளது, 24 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது எனவும் கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டவர், குறிப்பாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரைக்கு சென்று செல்பி எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். சென்னையில பல இடங்களில் நடைபெறும் கட்டுமான பணிகளில் உள்ள கிரேன்கள் அதிகமான உயரத்தில் இருப்பதை உயரத்தை குறைந்து வைக்க வேண்டும் எனவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கேட்டுக்கொண்டார்.