Minister Keerthana : எம்எல்ஏவாக பதவியேற்க அமைச்சர் கீர்த்தனாவிற்கு அனுமதி மறுப்பு.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட்-நடந்தது என்ன.?
Minister Keerthana : தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்ற நிலையில், அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக பதவியேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெற்றி சான்றிதழை கொண்டு வராத காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்தி தவெக ஆட்சி அமைத்தது. இதனையடுத்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணத்தை தற்காலிக சபாநாயகர் கருப்பையை செய்து வைத்தார். அந்த வகையில் இன்று காலை சரியாக 9.30 மணிக்கு சட்டசபை அரங்கில் ஆளுங்கட்சியான தவெக, எதிர்கட்சியான திமுக, அதிமுக உறுப்பினர்கள் வந்தனர். இதில் முதலமைச்சர் இருக்கையில் விஜய்யும், எதிர்கட்சி தலைவர் இருக்கையில் உதயநிதியும் அமர்ந்திருந்தனர். இதனையடுத்து தற்காலிக சபாநாயகர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணத்தை செய்து வைத்தார்.
விஜய், உதயநிதி, எடப்பாடி பதவியேற்பு
அதன்படி முதலமைச்சர் அடுத்ததாக அமைச்சர்கள், இதனை தொடர்ந்து சட்டசபை கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா என்ற வரிசைப்படி பதவியேற்பார்கள் எனவும், அடுத்தாக தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்கள் பதவி பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். அந்த வகையில் முதலில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அமைச்சர்கள் என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல் குமார், ராஜ்மோகன், டி கே பிரபு உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து பதவியேற்றனர்.
அமைச்சர் கீர்த்தனாவிற்கு அனுமதி மறுப்பு
அடுத்தாக அமைச்சர் கீர்த்தனா பதவியேற்க சபாநாயகர் முன்பாக வந்தார். அப்போது அவரிடம் சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கேட்டார். ஆனால் அமைச்சர் கீர்த்தனா வெற்றி சான்றிதழை கொண்டு வராத காரணத்தால் எம்எல்ஏவாக பதவியேற்க முடியாது என அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து எம்எல்ஏவாக பதவியேற்க முடியாமல் திரும்பி சென்றார். இதே போல முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.கருப்பண்ணனும் வெற்றி சான்றிதழை எடுத்து வராத காரணத்தால் பதவியேற்க முடியவில்லை. எனவே இன்று பதவியேற்க முடியாதவர்கள் சபாநாயகர் அறையில் இன்று மாலை பதவியேற்றுக்கொள்ளலாம்.
Before You Go
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















