ஜி.எஸ்.டி. வந்த பிறகு மாநிலங்களுக்கு வரி பகிர்வு செய்வதில், மத்திய அரசானது ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக தமிழ்நாட்டின் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
”மத்திய அரசு ஓரவஞ்சனை”:
தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தர். அப்போது பேசியதாவது, எப்போது ஜி.எஸ்.டி. வந்ததோ, அப்போது இருந்து மாநிலங்களுக்கான வரி பகிர்வில் மத்திய அரசானது ஓரவஞ்சனையுடன் செயல்பட்டு கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிகமாக வரி செலுத்துவதில் 2வது இடத்தில் தமிழ்நாடு மாநிலம் உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 26, 000 வழங்கப்பட்டிருக்கிறது, தமிழ்நாட்டிற்கு ரூ. 5,600 கோடி வழங்கப்பட்டிருக்கிறது, இதை ஒப்பிட்டு பார்க்கையில் ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலைதான் இருக்கிறது.
”நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்” :
மக்களாட்சியின் நம்பிக்கை வைத்திருக்க கூடிய தமிழ்நாட்டு மக்கள், 40 க்கு 40 க்கு தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.
வெற்றி பெற்ற இந்த்ய கூட்டணி உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தின் உரிமைக்காக குரல் எழுப்புவார்கள், அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு நிதி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல்:
18வது மக்களவைக்கான தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதிவரை நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகளானது ஜூன் 4 ஆம் தேதி வெளியானது, இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து , மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதியை மத்திய அரசு விடுவித்தது.
அதில் தமிழ்நாட்டிற்கு ரூ. 5, 600 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது. இந்நிலையில், வரி பகிர்வு தொடர்பாக அமைச்சர் எ.வ .வேலு கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். மேலும் மத்திய அரசானது, ஓரவஞ்சனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read: Vikravandi by Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன தெரியுமா ?