மேலும் அறிய

திருப்பத்தூரில் திமுகவின் பிரமாண்ட மாநாட்டிற்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்களா? - அமைச்சர் எ.வ.வேலு சொல்வது என்ன?

எடப்பாடி பழனிசாமியின் ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை குறித்த விமர்சனத்திற்கு சட்டமன்றத்தில் பதில் அளிப்பேன் என்றார் அமைச்சர் எ.வ.வேலு.

திருப்பத்தூர்: ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை குறித்த எடப்பாடி பழனிசாமி குறித்த விமர்சனத்திற்கு சட்டமன்றத்தில் பதில் கொடுப்பேன் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் நடைபெற உள்ள திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டிற்கான  ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு செய்தார். ஜோலார்பேட்டையில் அனைத்து துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கி மாநாடு நடைபெறுகிறது என அவர் தெரிவித்தார்.

அரசு என்பது வேறு அரசியல் என்பது வேறு

இதுதொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசுகையில், “ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டிற்கு, கடந்த ஜனவரி  மாதம் 8 ஆம் தேதியே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் அனுமதிகோரப்பட்டது. அதன்படி காவல்துறையினரின் 17 நிபந்தனைகள் படி, 45 ஏக்கரில் பயிற்சி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், அரக்கோணத்தில் தொடங்கி சேலம் மாவட்டத்தில் உள்ள  47 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் BLA2, BLC, BDA நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்‌ மாநாட்டில் பங்கேற்க உள்ளவர்களுக்கு, 6 லட்சம் தண்ணீர் பாட்டில்கள், பல்வேறு சிற்றுண்டிகள், சத்தாண உணவுகள் அடங்கிய பைகள்  தொகுதிவாரியாக வழங்கப்பட உள்ளது. 400 மொபைல் கழிவறைகள், தனியாரிடம் அனுமதி பெற்று 160 ஏக்கரில் 7 இடங்களில் வாகனங்கள் நிறுத்தும் இடம், மாநாட்டிற்கு வருகை புரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலி மருத்துவமனை, 25 மருத்துவர்கள், 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.

மேலும், அரசு என்பது வேறு அரசியல் என்பது வேறு என அனைத்து துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ்களை வாங்கிதான் இந்த மாநாட்டை நடத்துகின்றோம், தலைவரை பார்த்த உத்வேகத்தில், வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலில் தீவிரமாக உழைப்பாளர்கள் எனப்பேசினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு பதிலளிப்பேன்

மேலும் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சன கேள்விக்கு, அவர் எதிர்க்கட்சித் தலைவர் அப்படி இருக்கும்போது அவர் பாராட்டவா போகிறார், அவருக்கு நான் சட்டமன்றத்தில் பதிலிக்கின்றேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “தவெக கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு என்பது வருத்தம் அளிக்கிறது. 26 ஆண்டு‌ களமாக மாவட்ட செயலாளராக உள்ளேன். மீண்டும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெரும், முதலமைச்சர் தான் மீண்டும் 2026 அரியணையில் ஏறப்போகிறார்.அதிமுக மனரீதியாக பொருந்தாத கூட்டணியாக உள்ளது. திமுக பொறுத்த மட்டும் எஸ்ஐஆர் படிவம் முழுமையடையாமல் உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் வழங்கப்படும் என முடிவெடுத்த பின்னர்  விருப்ப மனு பெறப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை ; பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை !! பரபரப்பு தகவல்
சென்னை ; பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை !! பரபரப்பு தகவல்
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
125cc Scooters: லோ பட்ஜெட்டில் ஹை சம்பவம்..! கனெக்டட் டெக்குடன் மிரட்டும் 125சிசி ஸ்கூட்டர்கள் - மைலேஜ், விலை
125cc Scooters: லோ பட்ஜெட்டில் ஹை சம்பவம்..! கனெக்டட் டெக்குடன் மிரட்டும் 125சிசி ஸ்கூட்டர்கள் - மைலேஜ், விலை
GOLD AND SILVER RATE TODAY : வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
Embed widget