மேலும் அறிய

2500 Uthavi Thogai: பெண்களுக்கு ரூபாய் 2500 உதவித்தொகை எப்போது? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

தவெக வாக்குறுதியான ரூபாய் 2500 மகளிர்களுக்கு மாதந்தோறும் எப்போது முதல் வழங்கப்படும்? என்று அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.

தவெக அரசின் முக்கிய அமைச்சரான சிடிஆர் நிர்மல்குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தேவையானபோது செய்தியாளர்களை முதலமைச்சர் விஜய் சந்திப்பார். ஒவ்வொரு நாளும் நடக்கும் அரசு பணிகள், முதலமைச்சர் எடுக்கும் பணிகள் செய்தியாக வெளியிடப்பட்டு வருகிறது. 

2500 ரூபாய் எப்போது?

நிதிநிலை பட்ஜெட்டிற்கு பிறகுதான் இதுதொடர்பாக (ரூபாய் 2500) நடவடிக்கை எடுக்கப்படும். நிதிநிலை சரி செய்தபின்புதான் அந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு சட்டமன்றத்தில் எவ்வளவு இளைஞர்கள், பெண்கள் உட்கார்ந்துள்ளனர்? முதலமைச்சர் எப்படி செயல்படுகிறார்? ஒரு சட்டமன்றம் எப்படி செயல்படுகிறது? அதிகாரிகளுக்கு எந்தளவு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது? வந்த உடனே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு போதைப் பொருள் கட்டுப்படுத்தப்பட்டு  விதிமீறலில் உள்ள பார்கள் அகற்றப்பட்டு, ஒவ்வொரு நாளும் மக்கள் என்ன நினைத்தார்களோ? அதை நோக்கி முதலமைச்சர் செயல்பட்டுள்ளார்.

தவெக-வின் புது வெர்சன்:

இது எந்த வெர்சனும் இல்லை. தவெக-வின் புது வெர்சன். எங்கள் எம்எல்ஏ-க்கள் தொகுதியில் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். மக்கள் எதற்காக வாக்களித்தனரோ அதற்கான வேலையை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்பி-யுடன் ஆய்வு மேற்கொண்டோம். குட்கா, போதைப் பொருள் விற்கப்படுகிறதோ அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

போதையில்லா தமிழகத்திற்காக பல கடைகளில் ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வேலைகள் நடைபெறுகிறது. முதலமைச்சர் என்ன நினைத்து ஒவ்வொரு நிமிடமும் செயல்படுகிறாரோ, அதை செயல்படுத்த ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். 

தினசரி முதலமைச்சர் ஆய்வு:

சட்டம் ஒழுங்கு சரியாக போய்க் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் தினமும் ஆய்வு செய்கிறார். கண்டிப்பாக ஒரு சில நாளில் பெரியளவு மாற்றத்தை பார்ப்பீர்கள். ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்து முதலமைச்சர் அந்த துறையில் யார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆய்வு செய்து வருகிறார். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இருந்து கொண்டு, மதிய உணவையும் தலைமைச் செயலகத்திற்கு எடுத்துக்கொண்டு எந்த முதலமைச்சரும் இதுவரை இருந்தது இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆய்வின் அடிப்படையில்தான் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கிறார். 40, 50 வருடமாக ஒரு சிஸ்டத்தை ஒரே நாளில் மாற்ற முடியாது. அதை முழு ஆய்வு செய்கிறார். அனைத்தையும் தணிக்கை செய்து வெள்ளை அறிக்கை செய்ய வேண்டியது என்று முதலமைச்சர் முதல் நாளே சொன்னார். 

முழு ஆய்வு:

ஒவ்வொரு நாளும் அதற்கான பணியில் முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார். அனைத்து துறைகளும் கடும் விமர்சனத்துடன் இயங்கி வருகிறது. என்ன நிலைமை உள்ளது? என்பதை தணிக்கை செய்தால்தான் தெரியும். முதலமைச்சர் முழு ஆய்வை செய்த பின்பு நடவடிக்கை எடுப்பார். 

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் நாளை (05.06.26) மற்றும் நாளை மறுநாள் மின்தடை... வெளியானது முழு லிஸ்ட் !
மதுரையில் நாளை (05.06.26) மற்றும் நாளை மறுநாள் மின்தடை... வெளியானது முழு லிஸ்ட் !
தென்மேற்கு பருவமழை தீவிரம்! சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை தீவிரம்! சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget