தமிழ்நாட்டில் நாளை மருந்துகள் கிடைக்குமா? - அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி
நாளை நாடு தழுவிய மருந்தகங்கள் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 5,000 மருந்தகங்கள் திறந்திருக்கும் - அமைச்சர் அருண்ராஜ்

மருந்தகங்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலையில் மக்கள் பாதிக்காத வாகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் 5,000 மருந்தகங்கள் நாளை திறந்திருக்கும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
5,000 மருந்தகங்கள் திறந்திருக்கும்
ஆன்லைன் மருத்து விற்பனையை கண்டித்து நாளை மருந்தகங்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்துகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நாடு தழுவிய அளவில் நாளை மருந்தகங்கள் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் மக்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 50,000 மருந்தகங்கள் இருக்கின்றன. நாளை போராட்டத்தின்போது 5,000 மருந்தகங்கள் திறந்திருக்கும். அப்போலோ, மெட்பிளஸ், துளசி பார்மசி, முத்து பார்மசி போன்ற சங்கித் தொடர் மருந்தகங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
உயிர்காக்கும் மருந்துகள் கிடைக்கும்
அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படும் மருந்தகங்கள் போராட்டத்தில் பங்கேற்காது. முதல்வர் மருந்தகம், கூட்டுறவு சங்க மருந்தகங்கள் உள்ளிட்ட அரசு ஆதரவு பெற்ற மருந்தகங்களும் நாளை திறந்திருக்கும். தனியார் மருத்துவமனைகளில் இயங்கும் மருந்தகங்களில் நாளை வெளிமருந்து சீட்டிற்கு மருந்துகள் வழங்கப்படும். உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவை உடனடியாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மருந்துகள் கிடைக்காத புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருந்துகள், மாத்திரைகள், தடையின்றி கிடைக்க ஒவ்வொரு உதவி இயக்குநர் கீழ் இரண்டு மருந்து ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார். மேலும், நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் வேண்டாம் என்பதே தவெக அரசின் நிலைப்பாடு ஆகும் என்றும் மாநில உரிமைகளை பாதிக்கும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை எதிர்க்கிறோம் எனவும் கூறினார்.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















