சேலம் : நடப்பு ஆண்டில் இன்று மேட்டூர் அணை 7-வது முறையாக நிரம்பியது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து இது வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,420கன அடியாக அதிகரித்துள்ளது.

Continues below advertisement

7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழைதொடர்ந்து பெய்து வருவதால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்குதிறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது.மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.நேற்று காலை 119 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.69அடியாகவும் தற்போது 120அடியாகவும் உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை இன்று 7-வதுமுறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி எம் சியாகவும் உள்ளது.அணைக்கு வினாடிக்கு 14,420 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியா வினாடிக்கு 20000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்குமேல் மட்ட மதகுகள் வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நிரம்பியதால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இந்நிலையில் இன்று பிற்பகலில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 20,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்டா மாவட்டங்களில் பருவமழை பெய்து வருவதால் பாசனத்திற்கான நீர் தேவை குறைந்துள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் அதிகப்படியான நீர் வீணாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

இதையடுத்து பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை எந்த நேரத்திலும் மீண்டும் நிரம்பிவிடும் என்று சொல்லப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 9,026 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை 10,374 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 14,420 கன அடியாகவும், நீர்மட்டம் 119,69 அடியாகவும் உயர்ந்தது.