Metro Rail: சேலம், திருச்சி, நெல்லைக்கான  சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை மெட்ரோ நிறுவனம்  தமிழ்நாடு  அரசிடம் சமர்பித்துள்ளது.


சென்னை மெட்ரோ ரயில்:


சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் இந்த போக்குவரத்து பிரச்சைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 


இது ஒரு பக்கம் இருக்க, சென்னைக்கு இணையாக இரண்டாம் கட்ட நகரங்களிலும் மெட்ரோவை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  சென்னைக்கு அடுத்தப்படியாக டிராபிக் இருக்கும் கோவை, மதுரையில் மெட்ரோ அமைக்கப்படுகிறது. இந்த இரண்டு நகரங்களிலும் மெட்ரோவை அமைக்கும் பணிகளைச் சென்னை மெட்ரோ நிர்வாகம் கவனித்து வருகிறது.


திருச்சி-நெல்லை-சேலம்:


மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் வர இருக்கும் நிலையில், சேலம், திருச்சி, நெல்லையிலும் அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளன. சேலத்தில் 40 கி.மீ தொலைவிற்கும், திருச்சியில் 45  கி.மீ தொலைவிற்கும் மெட்ரோ அமைக்க உள்ளதாக தெரிகிறது.  இந்நிலையில், சேலம், திருச்சி, நெல்லைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக  அரசிடம் சமர்பித்தது மெட்ரோ நிறுவனம்.


அதில், சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் சேலம், திருச்சி, நெல்லை மாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்குவதற்கான ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதற்கட்ட பணிகளாக மூன்று மாவட்டங்களுக்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை (DFR) தமிழக அரசிடம் மெட்ரோ நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.


"நெல்லைக்கு வாய்ப்பில்லை"


திருச்சியில் 26 கிலோமீட்டருக்கு ஒரு கட்டமாகவும், 19 கிலோமீட்டருக்கு ஒரு வழிதடமாகவும் என  இரண்டு கட்டங்களாக மொத்தம் 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சேலம் மற்றும் நெல்லை காண விரிவான சாத்தியக் கூறு ஆய்வறிக்கையை மெட்ரோ நிறுவனம் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது.


நெல்லைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் மெட்ரோ அமைவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் எனவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், திருச்சி மாவட்டங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசின் பரிசீலனைக்கு பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.