சென்னையில் நாளை காலை 8.30 மணிக்குள் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்றும் நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பெருநகரில் நாளை காலை 8.30 மணிக்குள், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்.சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், ஒரு சில இடங்களில் மிக கனமழை வரையில் பெய்யும். சென்னையில் கடந்த 9 மணி நேரத்தில் அதிகபட்சமாக 32 மி.மீ, மழையும், நுங்கம்பாக்கத்தில் 23.7 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், இன்று இரவில் இருந்து நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கேட்டுகொண்டுள்ளார்.


இதுதொடர்பாக சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது சென்னையில் அதிகனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக மழை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் 3 பேரிடர் மீட்புப்படை உள்ளது. மழை குறைந்த பிறகு பயிர்ச்சேதம் குறித்து முழுமையாக கணக்கெடுக்கப்படும்” என்று கூறினார்.






 


மக்கள் வெளியே வர வேண்டாம்


இன்று இரவில் இருந்து நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.  மேலும், வீட்டில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கல்விச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண