குழந்தையின் உயிரை காப்பாற்றவே கை அகற்றப்பட்டதாவும்  Venflon ஊசி தமனியில் போடவில்லை எனவும் அரசு நியமித்த விசாரணைக் குழு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குழந்தைக்கு இரத்தநாள் அடைப்பு மருத்தினாலோ, மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை என மருத்துவக் குழு விளக்கம் தெரிவித்துள்ளது. குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமனின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 


என்ன நடந்தது? 


ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் ஒன்றரை வயது மகன் முகமது மகிர். இவருக்கு தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ், போடப்பட்டுள்ளது. மேலும், அறுவைச் சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.


 ‘ட்ரீப்ஸ்’ போடப்பட்ட இடத்தில் கறுப்பாக மாறியுள்ளது. பின், வலதுகை முட்டி பகுதி வரை செயலிழந்ததுடன், கறுப்பாகவும் மாறியது. பரிசோதனை செய்த மருத்துவர்கள் வலதுகையை அகற்ற வேண்டும் என கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர்.அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு பரிந்துரைக்கு பிறகு, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், குழந்தையின் கை நிலை மிகவும் மோசமடைந்தது.  சிலரின் கவனக்குறைவால் குழந்தைக்கு இந்நிலை ஏற்பட்டிருந்தால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் தெரிவித்திருந்தார். 


சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகியதால் அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.


இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவர்களது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.


மருத்துவ குழு விளக்கம்


இந்த விவகாரத்தில் குழந்தையின் பெற்றோர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்களின், துறை சார்ந்த செவிலியர்கள் மற்றும் குழந்தையின் சிகிச்சையில் சம்பந்தப்பட்ட இதர துறை மருத்துவர்களும் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 


விசாரனை அறிக்கை விபரம்!


இந்த குழந்தை குறைந்த எடையுடன் பிறந்துள்ளது. அதோடு,  இதயத்தில் ASD என்று சொல்லக் கூடிய ஓட்டையுடனும் தலையில் ஏற்பட்ட இரத்த கசிவின் காரணமாக Hydrocephalous என்று சொல்லட்டடும் -மூளை மண்டலத்தில் உள்ளநீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு தலைவீக்கம் ஏற்பட்டு அவதியுற்று வந்தது.


5 மாதக் குழந்தையாக இருக்கும் போது, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் V-P shunt என்று சொல்லப்படும் ஓர் அறுவை சிகிச்சை மூளை மண்டலத்திலிருந்து வயிற்றுப் பகுதிக்கு ஒரு நுண்ணிய குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குழந்தைக்கு cardiac arrest ஏற்பட்டு தீவிர சிகிச்சை மூலம் குணமாகியது.




 


ஆய்வின் முக்கிய குறிப்புகள்:


1. குழந்தை அனுதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.


2. Vention ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர்களின் வாக்கு மூலம் மற்றும் மருத்துவர்களின் வாக்கு மூலம் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது.


3. மருந்து கசிவினால் இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதிசெய்யப்படுகிறது.


4. குழந்தையின் வலதுகையில் வலி மற்றும் நிறமாற்றம் ஏற்பட்டபின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதனை செய்து உள்ளனர்.


5. குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர் Thrombophlebitis என்று கணித்து சிகிச்சை அளித்துள்ளார்.


6. இரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை.


7. Pseudomunas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று இரத்தநாளத்தை பாதித்ததால் இந்த குழந்தைக்கு வலது கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு (Arterial Thrombosis) ஏற்பட்டு உயிரை காப்பாற்றுவதற்காக வலது கை அகற்றப்பட்டது.