CPI: நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடங்களை ஒதுக்கியது திமுக

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு இடங்களை ஒதுக்கியது திமுக

Continues below advertisement

நகர்புற உள்ளாட்சி நேரடி தேர்தல் முடிந்துள்ள நிலையில், நடைபெற உள்ள மேயர் துணை மேயர் நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் பின்வருமாறு :  

Continues below advertisement

மாநகராட்சி துணை மேயர்

  1. திருப்பூர் – திருப்பூர் மாவட்டம்.

நகராட்சி தலைவர்

1.கூத்தாநல்லூர் - திருவாரூர் மாவட்டம்.

நகராட்சி துணைத் தலைவர்

1.பவானி- ஈரோடு மாவட்டம்.

2.புளியங்குடி - தென்காசி மாவட்டம்.

3.அதிராம்பட்டினம் - தஞ்சாவூர் மாவட்டம். 4. போடிநாயக்கனூர் - தேனி மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

1.வத்திராயிருப்பு - விருதுநகர் மாவட்டம்.

2.பூதப்பாண்டி - கன்னியாகுமரி மாவட்டம். 3. சிவகிரி- தென்காசி மாவட்டம்

3.புலியூர் - கரூர் மாவட்டம்.

பேரூராட்சி துணைத் தலைவர்

  1. கூத்தைப்பார் - திருச்சி மாவட்டம்.
  2. ஊத்துக்குளி - திருப்பூர் மாவட்டம்.
  3. மேலசொக்கநாதபுரம் - தேனி மாவட்டம்.
  4. கீரமங்கலம் - புதுக்கோட்டை மாவட்டம்.
  5. சேத்தூர் - விருதுநகர் மாவட்டம்.
  6. ஜம்பை - ஈரோடு மாவட்டம் 

முதல் தலித் சென்னை பெண் மேயர்: யார் இந்த 28 வயது பிரியா ராஜன்?

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னையில் 178 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்த சூழலில் சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர் யார் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜன் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.  இவர் வட சென்னை பகுதியான திருவிக நகரில் இருக்கும் 74வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

 பிரியா ராஜன் 28 வயதான எம்.காம். பட்டதாரி ஆவார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர்.

இதற்கு முன்பு தென் சென்னையைச் சேர்ந்தவர்களே திமுக சார்பில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வட சென்னையைச் சேர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

வட சென்னையைச் சேர்ந்தவர் மேயராக அறிவிக்கப்பட உள்ள நிலையில், துணை மேயராகத் தென் சென்னை பகுதியைத் சேர்ந்த மகேஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola