இந்திய நாட்டின் 74 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்றன. இக்கிராமசபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நிம்மேலி ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கிராம சபை கூட்டத்தில், உணவில் மருந்தை ஒருபோதும் கலக்கக்கூடாது. அது, விவசாயத்திற்கும், இம்மண்ணில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பேரழிவை ஏற்படுத்த கூடியது, ஆகையால் மக்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய மரபணு மாற்று கடுகு மற்றும் செயற்கை செறிவூட்டபட்ட அரிசியை அரசு ரேசன் கடைகளில் ஏப்ரல் 1 முதல் தமிழ்நாடு முழுவதும் வழங்கபடும் என அரசு அறிவித்திருந்தது.
இத்திட்டம் முறையான ஆய்வுகளின்றியும் மக்களிடம் கருத்துகேட்பு நடத்தாமல் வலுகட்டாயமாக திணிப்பதாகவும், இத்திட்டத்தினை தடை செய்ய வேண்டும். இதில் கலக்கப்படும் சத்துகள், முருங்கை கீரையிலும், சிறுதானியங்கள் மற்றும் தீட்டாத மரபு ரக அரசிகளில் மிக எளிமையாக உள்ளூரிலே கிடைக்கிறது. செயற்கை சத்துகள் நம் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அனைவரும் உண்ண வேண்டும் என்பது கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மருத்துவ வல்லுனர்களே தெரிவிக்கின்றேம் என்றும், ஆகையால் கிராம சபைக் கூட்டத் தீர்மானத்தில் செயற்கை இரும்புச் சத்து திணிக்கப்பட்ட செயற்கை செறிவூட்டபட்ட அரிசியை அனுமதி வேண்டாம், மரபணு மாற்றுக் கடுகிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. ஊரட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாநிதி தலைமையில் நடைபெற்று கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற துணைதலைவர் வணிதா, கிராம நிர்வாக அலுவலர் திம்மராசு, சமூக ஆர்வலர் இயற்கை விவசாயி நலம் சுதாகர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.
சீர்காழி அருகே 7 மணி நேரத்தில் 30 அடி நீளத்தில் 12 அடி அகலத்தில் தேசிய கொடியை வரைந்து அசத்திய சகோதரிகள். பொதுமக்கள் பாராட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ரயில்வே ரோடு தெருவை சேர்ந்தவர்கள் கயல்விழி , வினோதினி சகோதரிகள், சிறுவயது முதலே கோலம் போடுவதில் ஆர்வம் கொண்ட இவர்கள் சமீபத்தில் மார்கழி மாதம் முழுவதும் தங்கள் வீடுகளின் முன்பு விதவிதமான கோலங்கள் வரைந்து அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்நிலையில், இந்திய நாட்டின் 74 -ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு இவர்கள் வீட்டில் 30 அடி நீளமும் 12 அடி அகலத்தில் மிகப் பிரமாண்டமான தேசிய கொடியை மூன்று வண்ணங்களில் வரைந்து அசத்தியுள்ளனர்.
ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட கலர் கோல மாவுகளை பயன்படுத்தி ஏழு மணி நேரம் மிக அழகாக வண்ணம் தீட்டி நேர்த்தியாக தேசியக் கொடியை வரைந்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மனதில் தேசப்பற்றை வளர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுருத்தும் வகையில் "மரம் வளர்ப்போம் மழை பெருவோம்" எனும் வாசகத்தையும் எழுதியுள்ளனர். இவர்கள் வரைந்த தேசிய கொடியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ரசித்து செல்கின்றனர்.