மயிலாடுதுறை இரட்டை கொலையில் திருப்பம்... காவல்துறையினர் தரும் அதிர்ச்சி தரும் விளக்கம்...

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அதிர்ச்சி தரும் விளக்கம் அளித்துள்ளனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தொடர்ந்து நடைபெற்று வந்த சாராய விற்பனை 

மயிலாடுதுறை அருகே முட்டம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். அதனை தட்டி கேட்பவர்களை சாராய வியாபாரிகள் அடித்தும், கொலைமிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்றுள்ளது. அதில் சாராயவியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.


சாராய விற்பனையை தட்டி கேட்ட இருவர் கொலை

இந்த சூழலில் தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று அப்பகுதியை சேர்ந்த 17 வயது கேட்டதாகவும், அந்த சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிகேட்ட முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த கல்யாண்குமார் என்பவரது மகன் பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடி வந்த இளைஞர் 25 வயதான ஹரிஷ் மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் 20 வயதான ஹரிசக்தி ஆகியோரை சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் தகறாரில் ஈடுபட்டு, சராமாரியாக கத்தியால் குத்தியுளாளனர். இதில் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை 

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை தேடி வந்தனர். சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 


குற்றவாளிகள் கைது

இந்நிலையில் முன்னதாக தலைமறைவாக இருந்த ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மூவேந்தனை தேடி வந்த நிலையில் மூவேந்தனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது வேண்டும், மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் உறவினர்கள் நேற்று நள்ளிரவு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டனர்.


மீண்டும் சாலைமறியல்

இந்த இரட்டை கொலை விவகாரத்தில் தொடர்புடைய சாராய வியாபாரம் செய்யும் மேலும் இரண்டு பெண் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட முட்டம் கிராமத்து மக்கள் மயிலாடுதுறை கும்பகோணம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளின் வீடு மற்றும் வாகனங்களை கிராமமக்கள் அடித்து சூறையாடியுள்ளனர்.

காவல்துறையினர் விளக்கம்

முட்டம் வடக்கு தெருவில் வாசிக்கும் முனுசாமி என்பவரது 24 வயதான மகன் முவேந்தன் என்பவர் கடந்த 13.02.2025-ம் தேதி மாலை சுமார் 6.00 மணியளவில் அவரது தெருவில் நின்றுள்ளார். அப்போது போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அதே தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரது மகன் 28 வயதான தினேஷ் மேற்படி முவேந்தனை பார்த்து கூச்சலிட்டு சென்றுள்ளார். இவர்கள் இருவருக்குள் ஏற்கனவே குடும்ப தகராறு இருந்துள்ளது. மேலும் முவேந்தனின் அண்ணன் தங்கதுரை மற்றும் உறவினர் ராஜ்குமார் ஆகிய இருவர் மீதும் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் இருந்துள்ளன.

முன்விரோதம் 

இந்நிலையில் 13.02.2025-ம் தேதி முவேந்தன், தினேஷை கையால் அடித்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த மக்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பியுள்ளனர். இந்த முன்விரோதம் காரணமாக 14.02.2025 நேற்றிரவு தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான முட்டம் கல்யாணகுமார் என்பவரது மகன் 25 வயதான ஹரிஷ் , மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் 20 வயதான சக்தி மற்றும் முட்டம் 19 வயதான அஜய் ஆகியோர் முட்டம் வடக்கு தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கைதுதாகியுள்ள முனுசாமி மகன் 28 வயதான தங்கதுரை, ராதா என்பவரது மகன் 34 வயதான ராஜ்குமார் மற்றும் 24 வயதான முவேந்தன் ஆகியோர் மதுபோதையில் மேற்படி தினேஷிடம் தகராறு செய்து கத்தியாய் தாக்க முயற்சித்தனர்.


தடுக்க சென்ற நண்பர்கள் உயிரிழப்பு 

அதனை தடுக்க வந்த அவரது நண்பர்களான ஹரிஷ், அஜய் மற்றும் சக்தி ஆகியோர்களை மூன்று எதிரிகளும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதனால் ஹரிஷ், என்பவருக்கு வயிற்று பகுதியிலும், மற்றொரு நண்பர் சக்தி என்பவருக்கு முதுகு பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மூவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே ஹரிஷ், மற்றும் சக்தி இருவரும் உயிரிழந்துள்ளனர். 


இறந்த நபர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் முன்விரோதம் இல்லை 

இந்த வழக்கில் இறந்து போன ஹரிஷ், சக்தி மேலும் காயம்பட்ட அஜய் ஆகியோருக்கும் எதிரிகளுக்கும் முன்விரோதம் எதும் இல்லை. தினேஷ் மீது நடந்த தாக்குதலை தடுக்க முயன்ற போது இருவரும் இறந்துள்ளனர், ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக சம்பந்தப்பட்ட எதிரிகள் பெரம்பூர் முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை, மூவேந்தன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் மூன்று எதிரிகளும் கைது செய்யப்பட்டும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவும் உள்ளனர். 

தவறான செய்தி 

இந்நிலையில் சில ஊடகங்கள் மேற்படி சம்பவம் ஆனது மதுவிற்பனை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்ததாக உண்மைக்கு மாறான செய்தி வெளியிட்டப்பட்டுள்ளது. ஆனால், மேற்படி சம்பவமானது ஒரே ஊரில் ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு தொடர்பாக நடந்த சம்பவம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. எனவே இது தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறையின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola