May 1: மே 1ஆம் தேதியான நாளை உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மதுக்கூடங்கள், தனியார் பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் இருக்கும் பார்கள் போன்றவை செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இந்த வருடத்தில் இந்த நாள் மட்டுமில்லாமல் ஜூன் 7 ஆம் தேதி பக்ரித் பண்டிகையின்போதும் ஜூலை 6ஆம் தேதி முஹரம் பண்டிகையின்போதும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தின் போதும், ஆகஸ்ட் 16 கிருஷ்ண ஜெயந்தியின் போதும் ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போதும் அக்டோபர் 2ஆம் தேதியான விஜய தசம்/ காந்தி ஜெயந்தியின்போதும் அக்டோபர் 20 தீபாவளியின்போதும் டிசர்ம்பர் 25ஆம் தேதி கிரிஸ்துமஸ் பண்டிகையின்போதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981 விதி 2511 (SQ2) ஆகியவற்றின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (SQ1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பார்கள், உரிமம் பெற்ற கிளப்புகளுக்குச் சொந்தமான பார்கள், ஹோட்டலுடன் FL3 உரிமங்கள் மற்றும் பார்களை அடிப்படையாகக் கொண்டவை, மற்றும் பார்களைக் கொண்ட FL3(A), FL3(A) மற்றும் FL11 உரிமங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் டாஸ்மாக் கடைகள் எந்த நாட்களில் மூடப்படும்?

டாஸ்மாக் கடைகள் பின்வரும் நாட்களில் மூடப்படும்:

 

ஜனவரி 1: புத்தாண்டு தினம்

ஜனவரி 14: பொங்கல்

ஜனவரி 15: திருவள்ளுவர் தினம்

ஜனவரி 16: உழவர் திருநாள்

ஜனவரி 26: குடியரசு தினம்

பிப்ரவரி 11: தைப்பூசம்

மார்ச் 30: தெலுங்கு புத்தாண்டு

மார்ச் 31: ரம்ஜான் (இதுல் பித்ர்)

ஏப்ரல் 1: வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கான வருடாந்திர கணக்குகள் மூடல்

ஏப்ரல் 10: மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 14: தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாள்

ஏப்ரல் 18: புனித வெள்ளி

மே 1: மே தினம்

ஜூன் 7: பக்ரீத் (இதுல் அஜா)

ஜூலை 6: முஹர்ரம்

ஆகஸ்ட் 15: சுதந்திர தினம்

ஆகஸ்ட் 16: கிருஷ்ண ஜெயந்தி

ஆகஸ்ட் 27: விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 5: மிலாத்-உன்-நபி

அக்டோபர் 1: ஆயுத பூஜை

அக்டோபர் 2: விஜய தசமி/காந்தி ஜெயந்தி

அக்டோபர் 20: தீபாவளி

டிசம்பர் 25: கிறிஸ்துமஸ்

விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு ஏதேனும் சிறப்பு விதிகள் உள்ளதா?

ஆம், டாஸ்மாக் கடைகள் மாநில அரசின் விடுமுறை அட்டவணையைப் பின்பற்றுகின்றன மற்றும் அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் மூடப்பட்டிருக்கும்.

2025 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க முடியுமா?

மேலும்: இல்லை, மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.