பிரதமர் வருகை காரணமாக மார்க்சிஸ்ட் வேட்பாளர் பிரச்சாரத்துக்கு தடை

மதுரையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் வேட்பாளரின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

Continues below advertisement

இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம்  தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாயை ஆதரித்து, வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் இன்று மாலை 4 மணிக்கு மாட்டு வண்டி பிரச்சாரம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி நாளை மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதன் காரணமாக, மாட்டு வண்டி பிரச்சாரத்துக்கு காவல்துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து, மாட்டு வண்டி பிரச்சாரம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola