மாலை முரசு தொலைக்காட்சி நேற்று, தமிழக சட்டமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டது. இதில், திமுக மீண்டும் வெற்றி பெறும் என்றும், அதிமுக தோல்வியை தழுவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Malai Murasu writes to @ECISVEEP complaining about Arasu cable blurring the channel. Unprecedented! @TNelectionsCEO pic.twitter.com/1nNmxPDqeZ
— RadhakrishnanRK (@RKRadhakrishn) March 26, 2021

இதையடுத்து, அந்த சேனல் அரசு கேபிளில் இருந்து முடக்கப்பட்டதாகவும், தமிழக அரசால் முழுமையாக நிர்வகிக்கப்படும் அரசு கேபிள் டிவி அமைப்பு, மாலை முரசு சேனலை இருட்டடிப்பு செய்வதாகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. மேலும், அரசு கேபிள் அமைப்பின் செயல்பாட்டுக்கு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.