தமிழ்நாட்டில் பரம்பொருள் அறக்கட்டளையை நிறுவி ஆன்மீகம் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசி வருபவர் மகாவிஷ்ணு. கடந்தாண்டு, இவர் பேசிய கருத்துகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மாணவிகள் அழகாக இல்லாததற்கும் மாற்றுத் திறனாளிகளாகப் பிறப்பதற்கும் கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம் என அவர் பேசியிருந்தார். இதற்காக, அவர் கைது செய்யப்பட்டார். தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து, அவர் ஜாமீனில் வெளியே விடப்பட்டார்.
சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு:
உலகின் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மொரிஷியஸ் “ச்செபல்” பகுதி தேவி பராசக்தி ஆலயத்திற்கு சென்று அங்கு நடந்த யோகா மற்றும் வாழ்வியல் சத்சங்கத்தில் பக்தர்கள் முன்பு சொற்பொழிவாற்றி இருக்கிறார்.
எங்கே நாம் போகிறோம் என்ற தலைப்பில் பல முக்கிய கருத்துகளை எடுத்துரைத்த அவர், பொருளுக்கும் அருளுக்கும் இடையிலான தேடலில் மக்கள் பொருளை மட்டுமே தேடி ஓடுவதால் வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளும் உருவாகின்றன என்றும் பிறப்பு தொடங்கி இறப்பு வரையிலான இந்த வாழ்க்கை சுழற்சியில் முக்கியமான ஒரு சூத்திரத்தை மறந்துவிட்டால் நாம் மீண்டும் இந்த பிறப்பு சுழற்சிக்குள் சிக்கிக்கொள்வோம் என்று கூறினார்.
"நாளை என்ற ஒன்றை உணர முடியாத இந்த வாழ்வில் அறியாமை இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவரே குருவாக இருக்க முடியும். அதனால் என்னை குரு என்று கூறிக்கொள்ளமாட்டேன். ஒரு வழிகாட்டியாக மட்டுமே உங்கள் முன் எடுத்துரைக்கிறேன்" எனவும் மகாவிஷ்ணு தெரிவித்தார்.
பாஜகவை ஆதரிக்கிறாரா?
தர்மம் என்பது மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது எனவும் நமது நோக்கங்கள் எண்ணங்கள் செயல்கள் ஆகியவற்றை பிரபஞ்சத்தின் தெய்வீக ஒழுங்கமைவுடன் ஒருங்கிணைக்கும் இருப்பாக அது அமைவதை எடுத்துக்கூறியுள்ளார்.
இந்துக்களை ஈர்க்கும் நோக்கில் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக இவர் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் இவர் அரபிக் மொழியில் திருக்குரான் வசனம் பேசி வைரலானார். மதுரை ஆதீனமும் திருக்குரான் வசனம் பேசி பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்