Mahavir Jayanti 2025 Wishes: ஜெயின் மதத்தின் போதனைகளை பரப்பிய முக்கியமானவர்களில் ஒருவரான மகாவீரரின் ஜெயந்தி கொண்டாடும் நிலையில், மகாவீரர் ஜெயந்தி என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

மகாவீரர் ஜெயந்தி என்றால் என்ன?( Mahavir Jayanti 2025 )

மகாவீரர் ஜெயந்தி என்பது, சமண ( ஜெயின மதம் ) மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது ஜெயின் மதத்தின் 24-வது தீர்த்தங்கரராகத் திகழும் மகாவீரரின் பிறந்த நாளைக் அனுசரிக்கும் நாளாக கருதப்படுகிறது. மகாவீரர் கி.மு. 599  முதல் கி.மு. 527 ஆண்டுகளின் போது வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவர் அகிம்சை , சத்தியம் , திருடாமை, துறவு வாழ்வு, செல்வத்தைப் பற்றிய ஆசை இல்லாமை உள்ளிட்ட முக்கிய பண்புகளை மக்களிடத்தில் பரப்பினார்.

மகாவீரர் ஜெயந்தியானது இந்தியாவில், குறிப்பாக பீஹார் மாநிலத்தில் உள்ள பாவுரி, குஜராத், ராஜஸ்தான், மற்றும் கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் மிகப் பிரம்மாண்டமாகக் மகாவீர்ர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மகாவீரர் ஜெயந்தி தினமானது, மகாவீரின் போதனைகளை நினைவுகூரும் ஒரு முக்கியமான நாளாகவும், வன்முறையற்ற வாழ்க்கை முறையை பின்பற்ற ஊக்குவிக்கும் நாளாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், உங்களின் அன்புக்குரியவர்களுக்கு, வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில், உங்களுக்கு தொகுத்து வழங்கியிருக்கிறோம். அதை பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

டாப் 7 மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகள்: 

  1. பகை இல்லா மனசு, பயம் இல்லாத உள்ளம்; மகாவீரர் ஆசை அதுதான்! அந்த அமைதி உங்கள் வாழ்கையில் நிரம்பட்டும்..மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
  2. அகிம்சை என்பது அழியா செல்வம்; மகாவீரரின் பாதையை பின்பற்ற வாழ்த்துகள்! மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
  3. சத்தியம் பேசு, சாந்தியாய் இரு — மகாவீரரின் ஒளியாய் விளங்கி வாழ்க! மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்
  4. ஆன்மிகம் பரவும் இந்நாளில், மகாவீரரின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும்! மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்
  5. வாழ்க்கையில் வன்முறை இல்லாமல் வாழ்த்தும் வழி, மகாவீரர் காட்டிய பாதைதான்! மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
  6. நல்லெண்ணம், நல்லெழுத்து, நல்லவை பேசுதல் – இதுவே மகாவீரர் காட்டிய வழி! அனைவருக்கும் மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்
  7. தீவினையை தவிர்த்து தர்மம் வாழ்த்தும் நாள் இது! மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகள்!