Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (08.07.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின் தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் நாளை பல்வேறு பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
(காலை 9:00 - மாலை 5:00 மணி)
சமயநல்லுார், தேனுார், கட்டப்புளிநகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லுார், அதலை, பரவைம்மார்க் கெட் பகுதி, மங்கையர்கரசி கல்லுாரி, பொதும்பு, கோவில்பாப்பாக்குடி, சமயநல்லுார்.
(காலை 9:00 - மதியம் 3:00 மணி)
கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்துார், சாக்கிலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர்.