தமிழ்நாடு முதல்வர் பாரம்பரியம் மற்றும் புதிய வாய்ப்புகள் இணையும் முன்னோடியான நகரமாக மதுரை வளர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கில் நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) தயாரித்துள்ள மதுரை மாஸ்டர் பிளான் 2044 –ஐ வெளியிட்டார், அதில் என்ன உள்ளது முழுமையாக பார்க்கலாம்.
மதுரை
தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நகரமும், தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான மதுரை, அதன் செழுமையான கலாச்சாரப் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மற்றும் வளர்ந்து வரும் பன்முகப் பொருளாதாரம் ஆகியவற்றால் நீண்ட காலமாகத் தனித்து விளங்குகிறது. முக்கிய இரண்டாம் நிலை நகரமான (Tier- City) மதுரை, வாகள் உதிரிபாகங்கள், ரப்பர் தயாரித்தல் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் வலுவான உற்பத்தித் திறனைக் கொண்ட ஒரு முக்கிய உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்ட தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவை மதுரையில் சேவைத் துறையின் விரிவாக்கத்திற்கும் வித்திட்டுள்ளது. தென் தமிழ்நாட்டில் ஒரு வலுவான புவியியல் இருப்பிடத்தில் மதுரை அமைந்துள்ளதால், மதுரையின் அண்டை மாவட்டங்களுக்குச் சுற்றுலா, வணிகம், மருத்துவம் மற்றும் கல்விக்கான ஒரு முக்கிய மையமாக மதுரை திகழ்கிறது.
மதுரை மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் 33.5%
இம்மண்டலத்தின் நீண்டகால வளர்ச்சியை வழிநடத்த தமிழ்நாடு அரசு எடுத்துள்ள மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று மதுரை முழுமைத் திட்டம் 2044-ன் தயாரிப்பு மற்றும் வெளியீடு ஆகும். 1.254 93 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்திட்டப் பகுதியின் வளர்ச்சியை நிர்வகிக்க நகர் ஊரமைப்பு இயக்ககத்தால் (DTCP) தயாரிக்கப்பட்ட இத்திட்டம் இப்பகுதிக்கான விரிவான 20 ஆண்டுகாலக் கட்டமைப்பை வழங்குகிறது. இது மதுரை மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் 33.5% ஆகும். மேலும் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மதுரை உள்ளூர் திட்டப் பகுதியில் 2280 வட்சம் மக்கள் வசித்தனர். இது மாவட்ட மொத்த மக்கள் தொகையில் 75% ஆகும். இந்த மதுரைத் திட்டப் பகுதியானது, மதுரை மாநகராட்சி, மேலூர் மற்றும் திருமங்கலம் நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகள் மற்றும் 316 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDG) உறுதி செய்வதற்கான ஒரு முக்கியக் கருவியாக இம்முழுமைத் திட்டம் திகழ்கிறது.
நகர்ப்புறக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்
உள்ளடக்கியது. நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDG) உறுதி செய்வதற்கான ஒரு முக்கியக் கருவியாக இம்முழுமைத் திட்டம் திகழ்கிறது. பாரம்பரியமும், பொருளாதார முன்னேற்றமும் இணக்கமாகக் கைகோர்க்கும் ஒரு நகர்ப்புறப் பகுதியாக மதுரையை உருவாக்குவதே இத்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையாகும். வரலாற்றுப் பாரம்பரியத்தில் வேரூன்றி, புவியியல் முக்கியத்துவத்தால் வலுப்பெற்று, 2044-ஆம் ஆண்டிற்குள் கலாச்சார அடித்தளம் கொண்ட, காலநிலை மீள்திறன் மிக்க (Climate-Resilient), உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் பொருளாதார ரீதியாக ஆற்றல் மிக்க ஒரு நகரமாக மதுரையை மாற்ற இத்திட்டம் முனைகிறது. இம்மண்டலத்தின் நகர்ப்புறக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் மைய உத்தியாகும். மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து, சமச்சீரான இடஞ்சார்ந்த வளர்ச்சி மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் இதனை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய சாலை வழித்தடங்களை உருவாக்குதல், தற்போதுள்ள சாலைகளை அகலப்படுத்தித் தரம் உயர்த்துதல், புதிய பேருந்து முனையங்கள் மற்றும் ரயில்வே வசதிகளை நிறுவுதல், பெருந்திரள் விரைவுப் போக்குவரத்து (MRTS) வழித்தடங்களை உருவாக்குதல் மற்றும் விமான நிலையத்தை விரிவுபடுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய முன்மொழிவுகளாகும். இப்போக்குவரத்துத் தலையீடுகள் மண்டல மற்றும் உள்ளூர் இணைப்பை மேம்படுத்தவும், பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டவும். வணிக மாவட்டங்கள் மற்றும் தளவாடச் செயல்பாடுகளைப் புறநகர் வளர்ச்சி வழித்தடங்களை நோக்கிப் பரவலாக்கவும் (Decentralisation) வழிவகுக்கும்.
தனி அடையாளம்
மதுரையின் தனித்துவமான அடையாளத்திற்கும், அதன் மீள்திறனுக்கும், பாரம்பரியமும் கலாச்சாரமும் மிக முக்கியமானவை என்பதை இம்முழுமைத் திட்டம் வலியுறுத்துகிறது. நவீன நகர்ப்புற வளர்ச்சியுடன் உள்ளூர் கட்டிடக்கலை, வழிபாட்டுப் பாதைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தெருத் தோற்றங்கள் போன்ற புலனாகும் (tangible) மற்றும் புலனாகாச் (intangible) சொத்துக்களை ஒருங்கிணைக்கும் பாரம்பரியத்தை உள்ளடக்கிய அணுகுமுறையை' (Heritage-inclusive approach) இத்திட்டம் பின்பற்றுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மையப் பகுதியைப் பாதுகாத்தல், பாரம்பரியக் குடியிருப்புகளுக்குப் புத்துயிரூட்டுதல் மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுத்தல் ஆகியவற்றிற்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. இதன் மூலம் இயற்கை அமைப்புகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகப் பாரம்பரிய வரைபடத்தில் மதுரையை ஒரு கலாச்சார மற்றும் காலநிலை மீள்திறனும் கொண்ட நகரமாக நிலைநிறுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மதுரையை பாரம்பரியப் பொருளாதாரத்திலிருந்து பன்முகப் பொருளாதாரத்திற்கும், நகர மையத்தை நோக்கிய வளர்ச்சியிலிருந்து வழித்தடம் சார்ந்த வளர்ச்சிக்கும் மற்றும் படிப்படியான மேம்பாடுகளிலிருந்து கட்டமைக்கப்பட்ட தொகுப்பு அடிப்படையிலான திட்டமிடல் முறைக்கும் மாற்றும், ஒரு தீர்க்கமான வளர்ச்சி பாதையை இத்திட்டம் முன்னிறுத்துகிறது. அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பன்முகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம். வேளாண் விளைபொருள் பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடை ரப்பர் மற்றும் வாகன உதிரிபாகங்கள், பல்துறைத் தொகுப்பு. சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) வணிகம் மற்றும் சில்லறை வர்த்தகம் மற்றும் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் ஆகிய உத்திசார்த் தொகுப்புகளை இத்திட்டம் அடையாளம் கண்டுள்ளது.
புது மதுரை
ஒன்றுக்கொன்று துணையாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொகுப்புகள், ஒட்டுமொத்தமாக மதுரையை வலுவான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான பொருளாதாரத் தளமாக மாற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளன. பொருளாதாரத் தொருப்புகளுக்கு அருகில் குறைந்த விலை வாடகை வீடுகள், மகளிர் விடுதிகள், ஒற்றை அறை குடியிருப்புகள், மாணவர் விடுதிகள், முக்கியப் போக்குவரத்து மையங்களுக்கு அருகில் இரவு நேரக் காப்பகங்கள் மற்றும் குடிசைப்பகுதி மறுவாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கிய பலமுனை வீட்டுவசதி உத்தியை இத்திட்டம் முன்மொழிகிறது. அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் மீள்திறன் கொண்ட நகர்ப்புற வளர்ச்சிக்கான புதிய வரையறைகளைக் கொண்டு, இந்தியாவிற்கு முன்னுதாரனமாக "புது மதுரை"-யை திகழச் செய்யும் தெளிவான பார்வையை இந்த மதுரை முழுமை திட்டம் 2044 வழங்குகிறது.