தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் முக்கிய விஷேச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவதுடன் வைகாசி, சித்திரை உள்ளிட்ட முக்கிய மாதங்களில் ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கோவில் திருவிழாக்களை முன்னிட்டு கோவில்களில் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட இசை கச்சேரிகளுடன் ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.


இந்த நிலையில், ஆபாச நடனம் ஆடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டு காரணமாக திருவிழாக்களில் ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் நடத்த தடை  விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கோவில் திருவிழாக்களில் ஆடல் மற்றும் பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.




இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோவில் திருவிழாக்களில் ஆடல் மற்றும் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், கோயில்களில் திருவிழாக்கள் வழக்கம்போல நடைபெறலாம் என்றும், ஆனால் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தர இயலாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சியை நம்பி ஏராளமான கலைஞர்கள் குடும்பங்கள் இருந்தன. பின்னர், நீதிமன்ற தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த தொழிலை நம்பியிருந்த கலைஞர்கள் வேறு தொழிலுக்கு மாறிச்சென்றுவிட்டனர். ஆனால், இன்னும் சில கலைஞர்கள் மட்டும் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சி தொழிலை நம்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண