கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை மறு கூறாய்வு செய்யும் ஆணையை நிறுத்தி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. மாணவி குடும்பத்தினர் குறிப்பிடும் மருத்துவரை நியமித்து உடற்கூராய்வு செய்ய வலியுறுத்தப்பட்டு, தாங்கள் குறிப்பிடும் மருத்துவரை நியமிக்கும் வரை மறு உடற்கூறாய்வு செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். 


இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் உடலை மறு கூறாய்வு செய்யும் ஆணையை நிறுத்தி வைக்க முடியாது. வேண்டுமானால் சிபிசிஐடிக்கும், அரசு தலைமை வழக்கறிஞருக்கும் மனு அளிக்க மாணவியின் தந்தைக்கு அறிவுறுத்தப்பட்டது. 


தொடர்ந்து மாணவி தந்தை தரப்பில்தான் வழக்கறிஞர் உள்ளாரே, தான் பிறப்பித்த உத்தரவில் திருப்தி இல்லையா என நீதிபதி சதீஸ்குமார் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, நீதிபதி அளித்த தீர்ப்பில் திருப்தி இல்லையென்று தெரிவித்த மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் முறையிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற பள்ளி மாணவி கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீமதியின் பெற்றோர் தனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


தொடர்ந்து பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை காவல்துறை சார்பில் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த ஸ்ரீமதியின் உடற்கூறாய்வு அறிக்கையை பெறுவதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர்.


இந்த நிலையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது ஆடைகளிலும் ரத்த கரைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்து இருப்பதாக தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண