தஞ்சையில் நடந்த திமுக கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் இன்று கைது செய்தனர். 

Continues below advertisement

கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அவரது கைதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.

உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க உத்தரவு:

9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையி்ல், காவல் நிலைய ஜாமினில் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். பின்னர், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமின் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும் உத்தரவிட்டது.

Continues below advertisement

காரணம் என்ன?

தஞ்சையில் காவிரி நீர் விவகாரத்தில் நடந்த திமுக கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது, கட்சித் தொண்டர்கள் சிலர் திரிஷா என்று கூச்சலிட்டனர். அப்போது, அதற்கு உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து சர்ச்சையை உண்டாக்கியது. இணையத்தில் அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தஞ்சாவூரில் தவெக மகளிரணி நிர்வாகி புகார் அளித்திருந்தார். அவரது புகாரின் பேரில் 9 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது:

உதயநிதி ஸ்டாலினை கைது செய்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் திமுக-வினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலினை கைது செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

தஞ்சை செல்லும் வழியில் அவருக்கு விழுப்புரம் மாவட்டத்தின் ஒலக்கூர் காவல்நிலையத்தில் அவருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அவருக்க உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையிலும், அவர் தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முறைப்படி அவர் விடுவிக்கப்பட உள்ளார்.  

உதயநிதி ஸ்டாலினை கைது செய்து அழைத்துச் சென்ற வாகனத்தில் முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் ஆகியோரும் உதயநிதி ஸ்டாலினுடன் சென்றனர். உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக எம்எல்ஏ-க்கள் முன்னாள் அமைச்சர் பலரும் சாலைமறியலில் ஈடுபட்டனர். முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் சாலைமறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார்.