'தந்தையின் சொல்லை மகன் கேட்பதில்லை' - நீதிமன்றத்தில் ராமதாஸ் வேதனை
தந்தையின் சொல்லை மகன் கேட்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு பதில்.

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனது தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கவும் மனுவில் கோரியிருந்தார். அதனையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பாமக விவகாரத்தில் தலையிட முடியாது
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரியும், ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்க கோரியும் ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் பாமக விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், மாம்பழ சின்னத்தை முடக்குவது குறித்து தாங்கள் முடிவு எடுக்க முடியாது என்றும் விளக்கமளித்தது.
தந்தை சொல்லை மகன் கேட்பதில்லை
மகன் தந்தை சொல்லை கேட்பதில்லையா என்று தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியபோது, தந்தையின் சொல்லை மகன் கேட்பதில்லை என்று ராமதாஸ் தரப்பு பதிலளித்தது.
உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விட்டு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் ராமதாஸுக்கு எச்சரிக்கை விடுத்தது.
வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.























