தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கைதில் இருந்து தப்பிக்க அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கஸ்தூரி பேசியது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தன் அதிருப்தியை தெரிவித்தார்.

Continues below advertisement


இந்நிலையில், அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது. இதனால், தலைமுறைவாக உள்ள கஸ்தூரி சென்னை போலீசாரால் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது