மத்திய அரசு மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது. இதனால், தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் பலன் அடைந்தனர்.



தனியார் மெட்ரிக் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


 


இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரியூரைச் சேர்ந்த ஷகிலா பானு என்பவர், மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.




இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், அரசாணையில் உள்ளபடி கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவிக்கு அடுத்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஒரு இடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.