மேலும் அறிய

இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை

போக்சோ சிறுமிக்கு கட்டாயக் கருக்கலைப்பு முயற்சி ? இன்ஸ்டா ரீல்ஸ் 'பிரபல' மதுமிதா மீண்டும் கைது

கஞ்சா போதை இளைஞர்கள் தகராறு

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் கனகம்மாசத்திரம் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதி விட்டு ராமஞ்சேரி கிராமத்திற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது அங்கு வந்த கஞ்சா போதை இளைஞர்கள் மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசினர்.

தட்டிக் கேட்ட மாணவிகளை இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்கியுள்ளனர். இதை கண்டித்து மாணவிகளின் பெற்றோர்கள் சாலை மறியலில் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் கஞ்சா போதை இளைஞர்களுக்கு ஆதரவாக மதுமிதா.என்ற பெண்ணும் மாணவிகளை தரக் குறைவாக பேசியதுடன் காவல் துறையினரையும் தகாத வார்த்தைகளால் பேசியதால் அவர் கைது செய்யப்பட்டார்.

இளைஞருடன் உல்லாசமாக இருந்த சிறுமி

மதுமிதா ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கனகம்மா சத்திரம் பகுதியில் 2024 டிசம்பர் மாதம் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய போக்சோ வழக்கில் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கயல்விழியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அந்த இளைஞர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் அதே சிறுமியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயுடன் மதுமிதாவும் உடன் வந்துள்ளார். அப்போது ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் கூறியதையடுத்து, ஸ்கேன் சென்டருக்கு உள்ளே செல்லும் போது மதுமிதாவும் உள்ளே சென்றுள்ளார்.

நீங்கள் எதற்காக வந்துள்ளீர்கள்?

மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் சிறுமி மட்டும் உள்ளே வர அனுமதித்துள்ளனர். மேலும், சிறுமியின் தாயிடம் மதுமிதா குறித்து விசாரித்துள்ளார். "இவருடன் நீங்கள் எதற்காக வந்து உள்ளீர்கள் ? இவரை ஏற்கனவே வழக்கில் பார்த்துள்ளேன் என கேட்டுள்ளார்.

இதை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஸ்கேன் எடுத்து முடித்து வெளியே வந்த நிலையில் இதுகுறித்து மதுமிதாவிடம் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மதுமிதா அங்கிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவரிடம் தகாத வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையின் முதல்வர் மோகன் காந்தியிடம் மதுமிதா ரகளையில் ஈடுபட்டது குறித்து தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உதவி மருத்துவர் சிவகாமி சுந்தரி திருவள்ளூர் நகர காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நகர காவல் துறையினர் சிவகாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் வைத்தனர். ஏற்கனவே மதுமிதா கனகம்மா சத்திரத்தில் ரகளையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட நான்கு வழக்குகளில் சிறைக்கு சென்று வந்தது தெரிய வந்தது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாலங்காடு காவல் நிலையத்தில் அமர்ந்து புகார் எழுதுவது போன்று ரீல்ஸ் வெளியிட்டு அந்த ரீல்ஸில் " ஒருத்தனையும் விடமாட்டேன் " என்ற வாசகங்களை அடக்கி, அதை ரீல்சாக வெளியிட்டுள்ள சம்பவமும் தெரிய வந்துள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget