வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

வானிலை மைய அறிக்கை கூறுவது என்ன.?

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மேல், நேற்று நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிய உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில், அடுத்த 2 நாட்களில் கடந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

அதோடு, இடி, மின்னலுடன் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.?

மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 16, 17-ம் தேதிகளில், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.