நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கரூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் குழு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.


 


 




 


நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


 


 


 




 


இந்நிலையில், கரூர் ரயில் நிலையத்தில் பார்சல் அறை, நடைமேடை, பயணிகளின் உடைமைகள், ரயில் பெட்டிகளில் வெடிகுண்டு சோதனை போலீசார் தனது குழுவுடன் சோதனை மேற்கொண்டனர். மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் அவை முழுவதுமாக திடீர் சோதனை செய்யப்பட்டது. இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையத்திலும், பேருந்துகளுக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர். சன்னி என்ற மோப்பநாயுடன் சென்று வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.