TN Govt White Paper Live Updates: மாற்றத்திற்கு தேவையான எதையும் செய்யத் தயாராக உள்ளோம் -பிடிஆர்
TN Govt White Paper Live Updates: கடந்த 10 ஆண்டுகால நிதிநிலை குறித்து தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்
திமுக ஆட்சியில் நிதிநிலை எவ்வாறு சீரழிந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். அது பற்றி விவாதிக்கலாம். மத்திய அரசுடன் கைகோர்த்திருந்த திமுக, அப்போதைய ஆட்சியில் என்ன செய்தது?
நியாயமான இலக்கை நோக்கிய செல்கிறோம். இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு மோதல் என நினைக்கக்கூடாது. தமிழ்நாடு மாதிரியான வளர்ந்த, ஏற்றத்தாழ்வு குறைவாக உள்ளது. நிறைய சொத்து வைத்துள்ள மாநிலம்.
ஏதாவது ஒரு நாள் திருத்தியே ஆக வேண்டிய தவறுகள். எனவே திருத்தி தான் ஆக வேண்டும்.
எல்லாருக்கும் எல்லாம் என்பது எந்த அடிப்படையில்? எல்லாருக்கும் எல்லாம் இலவசம் என வழங்கமுடியாது. யாரெல்லாம் எதையெல்லாம் கைப்பற்ற முடியுமோ அதை கைப்பற்றியிருக்கிறார்கள். அரசாங்கம் கண் மூடி இருந்திருக்கிறது.
சட்டப்படி தான் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. நிதிநிலைக்கு முன்னாள் இது மக்களுக்கு தெரிந்து அது விவாதமாக நடைபெற வேண்டும் என்பதற்காக தான் இதை முன்பே வெளியிடுகிறோம்.
சிவகங்கையில் ஆண்டுதோறும் தண்ணீர் இல்லை என விவசாயிகள் போராட்டம் செய்கின்றனர். இதை திருத்தி அனைவருக்கும் நீர் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. எச்.ராஜா தேர்தல் உள்ளிட்ட பல வகைகளில் தோல்வி அடைந்தவர். நிதி அமைச்சர் தியாகராஜன், விவசாயிகளை திருடர்கள் என்று கூறியதால் அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என ராஜா கூறுகிறார். சாப்பாடு போட்ட கைக்கு துரோகம் செய்து சிவகங்கை விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் எச்.ராஜா. இது மாதிரி நிறைய பேர் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 15 வருடங்களாக வரி உயர்த்தபடவில்லை. சாதாரண வீட்டிற்கும் பங்களாவிற்கும் ஒரே வரி வசூலிக்கப்படுகிறது. அது மாற்றப்பட வேண்டும்.
வெள்ளை அறிக்கை தேவைப்படாத அளவிற்கு நாங்கள் செயல்பட விரும்புகிறோம். அது சாியா என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்.
இது முதல் வெள்ளை அறிக்கை தான்... கடைசி வெள்ளை அறிக்கை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
கூட்டாட்சி முறைக்கும், மனித முறைக்கும் விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது. நான் அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை. இன்றைக்கு வரும் வணிகவரியிலிருந்து பல்லாயிரம் கோடி வர வேண்டும்.
வாங்கிய கடன் முதலீடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய் வாங்கினாலும் அதை அப்படியே முதலீடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய் வாங்கி 50 காசு மட்டுமே முதலீடு செய்தேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினால், அது அவரது தவறை அவரே ஒப்புக்கொண்டதாக அர்த்தம்.
தமிழ்நாடு அதிகமாக 29 லட்சம் எக்டேர் நிலச் சொத்து கொண்ட மாநிலம். அதில் 2.05 லட்சம் எக்டேர் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதில் 40 சதவீதம் கட்டடம் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
75 ஆயிரம் கோடி வரை வருமானம் வரவில்லை. மானியங்கள் வழங்கும் முன்பே பாதியில் பலரிடம் போய்விட்டது. கொடுக்கும் போது மீதி போய்விட்டது. ஆண்டுக்கு 3 லட்சம் கோடி செலவு செய்கிறது. அதில் 16 சதவீதம் வீணாக செலவாகிறது.
எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் இருக்க மாட்டோம். அதற்காக இந்த அறிக்கை தரவில்லை. சொன்னதை கட்டாயம் செய்வோம்.
என்னுடைய கனவுகள் சாதாரண சீர்திருத்தங்கள் மூலமாக மட்டும் சாதிக்க முடியாது என்பதை நான் அறிவேன். முழுமையான புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தினால் தான் இந்த கனவை நினைவாக்க முடியும். எதை வேண்டுமானாலும் , எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் கொண்டு வர தயாராக உள்ளோம்.
மக்களுடையே ஆதரவும், புரிதலும், ஒத்துழைப்பும் இருந்தால் இதை திருத்தி, முன்பு இருந்த தமிழ்நாட்டை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.
5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,ஆக இருந்துவிட்டு, 3 மாதம் அமைச்சராக இருந்து ஆவணங்களை பார்த்தால் வியப்பாக உள்ளது. 5 ஆண்டுகளில் கொஞ்ச நஞ்ச தவறு ஏற்படவில்லை. சிஸ்டமே தவறாக உள்ளது. எனக்கே பயமாக உள்ளது. இதை சரி செய்ய முடியுமா என்கிற பயம்.
ஒரு நாளைக்கு 55 கோடி ரூபாய் மின்சார வாரியத்திற்கு இழப்பு. இருட்டு அறையில் செயல்படுவதைப் போல உள்ளது.
இந்த சிஸ்டத்தை மாற்றுவதை சிலர் விரும்பமாட்டார்கள். இதை தடுப்பார்கள். உடைப்பார்கள். ஊடகத்தை வைத்து இடையூறு செய்வார்கள்.
எவ்வளவு சூழ்நிலை தவறாக இருக்கிறதோ அதை திருத்த முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. வெளிப்படையான அரசாக இருக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார் .
2006-11ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இந்தியாவின் சராசரி வளர்ச்சி 8.62 சதவீதம் , தமிழ்நாட்டின் வளர்ச்சி 10.15 சதவீதம்.
பெண்களுக்கு இலவச பயணம் வழங்கியதால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்படவில்லை. அதற்கு முன்பிருந்தே நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
அரசு போக்குவரத்து கழகமும், மின்சார வாரியம் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளனர். டீசல் தொடர்ந்து அதிகரித்தாலும் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. டீசல் மட்டுமே பெரிய காரணமில்லை. மேலாண்மை பணிகள் ஒரு காரணம். ஓய்வூதியமும் கடனுக்கு காரணம்.
ஊராட்சி, நகராட்சிகளில் வரி வருவாய் குறைந்துள்ளது. சொத்து வரி உயர்த்தப்படவில்லை. இது முக்கிய காரணம். சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சிகளும் 1200 கோடி ரூபாய்க்கு மேல் மின்சார பாக்கி உள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்திலும் இது போன்ற நிலை உள்ளது. இதற்கு காரணம் வருவாய் பற்றாக்குறையே.
மாநிலங்களிடம் வருமான வரி தொடர்பான டேட்டா பேஸ் இல்லை. இதனால் யார் வரி செலுத்துகிறார்கள், செலுத்தவில்லை என்பது எங்களுக்கு தெரிவதில்லை.
இலவச திட்டங்களுக்கு, மோட்டார் வாங்குவதற்கு வழங்கப்படும் மானியத்திற்கு பெரிய தொகை செல்கிறது. வழங்கப்படும் மானியத்திற்கான சரியான தகவல் இல்லை. தவறான நபர்களுக்கு சென்றிருக்கிறது. சிஸ்டம் அந்த மாதிரி உள்ளது.
20 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு இன்னும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஒரு லிட்டர் பெட்ரோலில் வரி மூலம் 1.40 பைசா தான் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. 31 ரூபாயை மத்திய அரசு வரியாக எடுத்துக்கொள்கிறது.
மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தாலும், வரி எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்று பார்த்தாலும் மத்திய அரசின் வரி வசூல் நியாயம் அற்றது. மத்திய அரசின் மானியம் வரும் அதை செலவிட அவர்கள் அறிவுறுத்துவார்கள். வரி அதிகமாக, மானியம் குறைவாக முன்பு வந்து கொண்டிருந்தது. இப்போது வரியை குறைத்துவிட்டார்கள். குறிப்பாக செஸ் வரியை குறைத்துவிட்டனர்.
மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் பணம் படைத்தவர்கள் கட்டக்கூடிய நேர் முக வரியை குறைத்து மறைமுகவரியை அதிகரித்து சாமானியர்களிடம் இருந்து வருவாயை பெற்று வருகின்றனர். இதனால் கார்ப்பரேட்டுகளுக்கும், பணம் படைத்தவர்களுக்கம் லாபம்.
அரசாங்கம் கைக்கு வராத பணம், பெரிய கார்ப்பரேட்டிடம் உள்ளது. அது பொதுமக்களுக்கான துரோகம். அந்த வரி வருவாய் அரசுக்கு வர வேண்டும்.
மத்திய அரசிடமிருந்து வரும் வருவாய் குறைந்துவிட்டது. அதுவும் பின்னடைவாக உள்ளது. இப்படி பல நெருக்கடி உள்ளது.
வாழத்தகுதியான நாடுகளில் கூட அரசின் பட்ஜெட் உற்பத்தியில் 30 சதவீதம் இருக்கும். அது வானத்தில் இருந்து வருவதில்லை. வரிகள் மூலமே அவை பெறப்படுகிறது.
வரி எடுக்கவில்லை என்றால் அரசு எப்படி நடக்கும்? யாரிடமிருந்து எவ்வளவு எடுக்க வேண்டும் என்றும் உள்ளது. அதன் படி தான் வரி எடுக்கப்படுகிறது.சரியான வரியை, சரியான நபரிடம், சரியான அளவு எடுத்து பொது சேவைக்கு, வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். -பிடிஆர்.
மாநில வரி வருமானம், வரியில்லா வருமானம், மத்திய அரசிடமிருந்து வரக்கூடிய வரி பங்கு, மத்திய அரசின் திட்ட மானியம் ஆகியவற்றில் மாநில வரி வருவாயில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2006-11ல் 13 சதவீதம் அதிகரித்தது. கடந்த 5 ஆண்டுகளில் 4.65 சதவீதமாக சரிவு
2014 கொரோனா வருவதற்கு முன் சரிந்து, 2018-19ல் கடுமையாக சரிந்து, இன்று 4.65 சதவீதம் உற்பத்தியில் வருவாய் குறைந்துள்ளது.
பொது சந்தா கடன் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 லட்சம் உள்ளது.
வருமானம் இல்லாத அரசு செலவீனத்தை குறைக்க முடியாது. வருமானம் சரிந்து போயுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இதை குறிப்பிட்டுள்ளது. வருவாய் 3.16 சதவீதம் வரை குறைந்து வருகிறது. திமுக ஆட்சியில் 2006-11 உபரி வருமானம் முதல் இரண்டு வருடம் மட்டுமே பற்றாக்குறை இருந்தது. 2011 ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 17 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
2011-16 ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டிற்கு 17 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. பிடிஆர் பேட்டி
5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை.பிடிஆர் பேட்டி
கொரோனாவால் வருவாய் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் கொரோனா வருவதற்கு முன்பே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆண்டு அறிக்கை உள்ளது.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இருந்ததை விட கடைசி 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது
வருமானம் இல்லாத அரசு செலவீனத்தை குறைக்க முடியாது. வருமானம் சரிந்து போயுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இதை குறிப்பிட்டுள்ளது. வருவாய் 3.16 சதவீதம் வரை குறைந்து வருகிறது. திமுக ஆட்சியில் 2006-11 உபரி வருமானம் முதல் இரண்டு வருடம் மட்டுமே பற்றாக்குறை இருந்தது. 2011 ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 17 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
கடன் நிலை என்ன, வருமானம் எப்படி மாறியுள்ளது, செலவீனம் எப்படி மாறியுள்ளது.மூ என மூன்று உள்ளது முக்கிய பொதுநிறுவனமான மின்வாரியம், மெட்ரோ வரியத்தின் நிலை என்ன என்பதும் இதில் உள்ளது.
தற்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை, செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின் அரசு இணையத்தில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
இது பலரின் உதவியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றாலும், இதில் ஏதாவது தவறு இருந்தால் அதற்கு நான் மட்டுமே முழு பொறுப்பு. வேறு யாரும் அதற்கு பொறுப்பல்ல. அமைச்சர் பிடிஆர் பேட்டி
வெள்ளை அறிக்கை தொடர்பாக ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கைகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டது என நிதியமைச்சர் பிடிஆர் பேட்டி
வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாமக்கல் கவிஞர் இல்லத்திற்கு தற்போது வருகை தந்துள்ளார். உடன் நிதித்துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.
சரியான 11:30 மணிக்கு தமிழ்நாடு நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார் என கூறப்பட்ட நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் அரங்கில் செய்தியாளர்கள் முன்பு இன்னும் சில நிமிடங்களில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ி
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு நிதிநிலை சீரழிந்ததாக கூறப்படுவது தவறானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன்கள் தற்போது மூலதனங்களாக உள்ளதாகவும், அந்த கடன்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவு கூறினார்.
இன்று காலை 11:30 மணிக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், சற்று முன் அது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதன் மூ,ம் அறிக்கை வெளியாகும் முன்பே அதை அதிமுக தரப்பு எதிர்த்துள்ளது.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு நிதிநிலை சீரழிந்ததாக கூறப்படுவது தவறானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன்கள் தற்போது மூலதனங்களாக உள்ளதாகவும், அந்த கடன்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவு கூறினார்.
இன்று காலை 11:30 மணிக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை செய்தியாளர் சந்திப்பில் அதை வெளியிட உள்ள நிலையில், இப்போதே தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்கள் குவிந்து வருகின்றனர். காட்சி ஊடகம், அச்சு ஊடகம், டிஜிட்டல் ஊடகம் என அனைத்து ஊடக பிரதிநிதிகளும் அங்கு திரண்டுள்ளனர்.
வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்ததற்கு அதிமுக எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். ‛இப்போது வெள்ளை அறிக்கை வெளியிட என்ன அவசியம்’ என அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர், ‛மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அரசின் கடன் சுமை குறித்து மக்களால் அறிந்து கொள்ளமுடியவில்லை’ என பழனிவேல் தியாகராஜன் அப்போது பதிலளித்தார்.
தமிழ்நாடு வெள்ளை அறிக்கை, இன்று காலை 11:30 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிடும் வெள்ளை அறிக்கை 120 பக்கங்கள் கொண்டது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதிநிலை எவ்வாறு இருந்தது என்கிற விபரம் இடம் பெறும். அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் கடன், வருவாய் இழப்பு உள்ளிட்ட பல தகவல்கள் அதில் இடம் பெற உள்ளது.
வெள்ளை அறிக்கை தமிழகத்தின் 10 ஆண்டு நிதி பின்னடைவை வெளிப்படையாக தெரிவிக்கும் என கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதி பின்னடைவு தொடர்பான விரிவான அறிக்கைகள் அதில் இடம் பெறலாம்.
கடந்த 2001ல் அதிமுக ஆட்சியின் போது நிதியமைச்சராக இருந்த சி.பொன்னையன், பட்ஜெட் தாக்கலின் போது நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இப்போது பட்ஜெட் தாக்கலுக்கு 4 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Background
கடந்த 10 ஆண்டுகால நிதிநிலை குறித்தும், பல்துறை செலவீனங்கள் குறித்தும் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 11:30 மணிக்கு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்கிறார். 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையில் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நிதி நிலை தொடர்பான விரிவான அறிக்கை இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -