Lions Corona Positive: வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று : ஒரு சிங்கம் உயிரிழப்பு

சென்னை, வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

உலகளவில் கொரோனா பாதிப்பு மனிதர்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் மிக கடுமையாக பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் மனிதர்கள் மட்டுமின்றி பல நாடுகளில் விலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், கொரோனா வைரசின் தாக்கத்திற்கு வண்டலூர் உயிரியியல் பூங்காவும் தற்போது ஆளாகியுள்ளது. சென்னையின் முக்கியமான சுற்றுலாத்தளமாக விளங்கும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள், புலி, மான், கரடி, உள்ளிட்ட பல உயிரினங்கள் உள்ளன. இந்த நிலையில், இந்த பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola