தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.


அதனை தொடர்ந்து, 8 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதியும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 


10.02.2024 மற்றும் 11.02.2024: தென்தமிழக    கடலோர    மாவட்டங்கள்   மற்றும்    டெல்டா மாவட்டங்களில்  ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.


12.02.2024: தென்தமிழக  மாவட்டங்கள்   மற்றும்    டெல்டா மாவட்டங்களில்  ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில்  வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இருப்பினும் பகல்  நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 31.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதேபோல், குறைந்தபட்சமாக கொடைக்காணலில் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அடுத்து வரும் நாட்களில் வறண்ட வானிலையே இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.