மனித உயிர்களை காக்கும் மகத்தான பணிக்கு நன்றி சொல்லும் நாள் இன்று ....

Continues below advertisement

உலகில் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண்டு என்றால், அவர் மருத்துவராகத்தான் இருப்பார்கள். அவர்களைப் போற்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day)   கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவர் தினம் (National Doctors' Day) கொண்டாடப்படுகிறது. புகழ்பெற்ற மருத்துவர் மற்றும்  மேற்கு வங்கத்தின் 2வது  முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திர ராய் (Dr. B.C. Roy) அவர்களின் பிறந்தநாளைக் சிறப்பிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 

Continues below advertisement

இவருடைய பிறந்தநாளும் மறைந்த நாளும் ஜூலை 1 என்பதால், இந்திய அரசு இவரைப் பெருமைப்படுத்த இந்த நாளைத் தேர்ந்தெடுத்தது.

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) இந்தியாவெங்கும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர் வாழ்த்து தெருவிக்கின்றனர் .

முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!

எக்ஸ் தள பதிவில், “மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன் என்று  முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிப்புமிக்க மருத்துவர்களின் கடின உழைப்பு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாகும். மிகவும் சவாலான சூழ்நிலையிலும் அவர்கள் செய்யும் அயராத உழைப்பும்  எண்ணற்ற மக்களின் நம்பிக்கையையும் நன்றியையும் பெற்றுத் தந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  "மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குவதிலும், நோய்களைக் குணப்படுத்துவதிலும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிவகுக்கிறது" என்று வாழ்த்தியுள்ளார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்மருத்துவப் பின்புலம் கொண்ட தலைவரான இவரும் மருத்துவர் தினத்தை முன்னிட்டுத் தனது வாழ்த்துச் செய்தியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

"மருந்துகள் நோயைக் குணப்படுத்தலாம், ஆனால் மருத்துவர்கள் மட்டுமே மனிதர்களைக் குணப்படுத்த முடியும்." என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் .