எல்ஜிபிடி பிரிவினரை கண்ணியமான முறையில் குறிப்பிடும் வகையிலான சொல்லகராதியைத்(LGBT Glossary) தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 


மூன்றாம் பாலினத்தவர்களை மருவிய, மாறிய பாலினத்தவர், திருநங்கை, திருநம்பி, தன் பாலீர்ப்பு ஆண், தன் பாலீர்ப்பு பெண், இரு பாலீர்ப்பு நபர், பால் புதுமையர்  என இடத்துக்கு ஏற்ப அழைக்க வேண்டும் என அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து,சொல்லகராதியில் குறிப்பிட்டுள்ள பெயர்களால் மட்டுமே மூன்றாம் பாலினத்தவர்களை அழைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழக அரசு மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் பாதுகாப்பு, விதிகள் பற்றிய கொள்கை வரைவைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரியுள்ளது. இதற்குத் தமிழக அரசு 6 மாதம் அவகாசம் கேட்ட நிலையில், வழக்கு செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


ALSO READ | Group 5A Notification: அரசு ஊழியர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு