"அக்டோபர் 3ஆம் தேதி பொது விடுமுறை என தகவல் வெளியாகிய நிலையில், வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது"
ஆயுத பூஜை விடுமுறை
இன்று நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை விஜயதசமி விழாவும் விமர்சியாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதுபோக அக்டோபர் இரண்டாம் தேதி, காந்தி ஜெயந்தி விழா என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று மற்றும் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை விடுமுறை ?
இதேபோன்று நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை கிடைத்தால், தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் ஒரு சில கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இருப்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென பரவிய தகவல்
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை பொது விடுமுறை என சில ஊடகங்களில் தகவல் பரவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும் என மகிழ்ச்சியாக இருந்தனர்.
வெள்ளிக்கிழமை விடுமுறை பரவிய வதந்தி
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை பொது விடுமுறை என, தகவல் பரவியது வதந்தி என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பொது விடுமுறை என்பது குறித்து, செய்தி உண்மையில்லை வர வெள்ளிக்கிழமை பொது விடுமுறை இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் விடுமுறை
ஆனால் ஒரு சில கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை பொது விடுமுறை இல்லை என்றாலும், விடுமுறை விடப்பட்ட கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டதில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது விடுமுறை இல்லை என்பதால் அரசு அலுவலகங்கள், அரசுத்துறை நிர்வாகங்கள் வெள்ளிக்கிழமை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.