உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை பல்வேறு பொது மக்களுக்கு பல்வேறு சிரமங்களையும், வாழ்வாதார இழப்பினையும் கொடுத்துள்ளது ஒருபுறம் என்றால், கொரோனா தொற்றினால் சிகிச்சைக்கு கூட படுக்கை கிடைக்கமால் பொதுமக்கள் தவித்துவந்த நிலையில் கொரோனா 2-வது அலையில் அதிகம் காணப்பட்டது. தமிழகத்திலும் 2-வது அலையினால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி விடக்கூடாது என்று தமிழக அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்தது. போதுமான படுக்கைகள் கிடைப்பதற்கும், அனைவருக்கும் மருத்து வசதி கிடைக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தங்கள் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதிகிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு ஒதுக்கிய சட்டமன்ற அலுவலகத்தை விளாத்திகுளம்  சட்டமன்ற உறுப்பினர் அரசு கலைஞர் மருத்துவமனையாக மாற்றியுள்ளார்  மார்க்கண்டேயன். 
 
அரசு கலைஞர் மருத்துவமனையில் தினமும் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை, செயல்படும் இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் பணியில் இருப்பார்கள். சளி பரிசோதனை,  கொரோனா தடுப்பு ஊசி போடுவது, சர்க்கரை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை போன்றவை இந்த மருத்துவமனையில் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விளாத்திகுளத்தில் 30 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் அதில் பயன்பெற்று வருகின்றனர். கலைஞர் அரசு மருத்துவமனையை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த மருத்துவமனை கூடுதலாக செயல்படுவதால் தற்பொழுது செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுவது மட்டுமின்றி, மக்கள் எளிதில் பரிசோதனை செய்துகொள்வது, தடுப்பு ஊசி போட்டு கொள்வதற்கு வாய்ப்பாக உருவாகியுள்ளது. 
 

 
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை அரசு கலைஞர் மருத்துவமனையாக மாற்றிய மார்க்கண்டேயனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.