விழுப்புரம்: தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முனைவோர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் அதற்கு மாநிலம் அமைதியாக இருக்கிறது அதற்கு சட்ட ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படுவதால் தான் என விழுப்புரத்தில் நடைபெற்ற  சட்ட ஒழுங்கு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


விழுப்புரம் மாவட்டத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு இன்று மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், மீனவர்கள், மகளிர் குழுக்குகள், தொழில் முனைவோர் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். கலந்தாய்வு கூட்டத்தின் போது விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் மூன்று மாவட்ட தேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம் கடலூர் ஆகிய மூன்று மாவட்ட காவல் துறை எஸ்பிக்கள் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபுவுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் போதை ஒழிப்பு குறித்து எடுக்கபட்டு வரும் நடவடிக்கைகள் குற்றச் சம்பவங்கள் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சட்ட ஒழுங்கினை பாதுகாக்கும் வகையில் ரவுடிகள் கைது செய்யபட்டுள்ளது நிலுவையிலுள்ள வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைப்பது எத்தனை போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து கூட்டத்தில் கலந்தாலோசித்தார். அதனை தொடர்ந்து எஸ்பி மற்றும் மாவட்ட ஆட்சியர் மத்தியில் பேசிய ஸ்டாலின்  சட்ட ஒழுங்கினை பொது அமைதினை நிலைநாட்டுவதற்கு மாவட்ட எஸ்பிக்களுக்கு உறுதுணையாக உள்ளதை  பாராட்டுவதாகவும் மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு சட்டஒழுங்கு தான் மிக முக்கியமானதாக உள்ளது. அமைதியான மாநிலத்தில் சமூக பொருளாதார வளர்ச்சி ஏற்படும் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முனைவோர்கள்  வந்துகொண்டிருக்கிறார்கள்.


ஏனென்றால் அதற்கு மாநிலம் அமைதியாக இருக்கிறது அதற்கு சட்ட ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படுவது தான் அர்த்தம் அதற்கு எஸ் பிக்கள் உறுதுனையாக உள்ளனர். சில சமயங்களில் சில பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் அதுவே பின்னர் பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது.  அந்த பிரச்சனைகள் குறித்த செய்திகள் விரைவாக பரவி விடுகிறது என்பதால் சிறு சம்பவங்கள் கூட கவனிக்கபடவேண்டும் என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மாவட்ட காவல் துறையினரும் ஆட்சியரும் சமூக ஊடகங்களின் வீச்சினையும் அதன் தாக்கத்தினையும் உணர்ந்து செயல்படவேண்டும் என வலியுறுத்தினார்.